இயக்குனராக மாஸ்காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

நீண்ட இடைவெளிக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் "முசாபிர்" என்ற மியூசிக் வீடியோவை இயக்கி இருக்கிறார்.  இது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

1 /4

மாரி 2, பீஸ்ட் போன்ற படங்களின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடிகராக அறிமுகமாகிறார். கதா நாயகியாக ஷ்ரஷ்டி வர்மா என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார்.  

2 /4

ஹிந்தியில் சிவன் என்ற புதுமுக கதா நாயகன் நடித்து இருக்கிறார். நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோ விரைவில் வெளியாக உள்ளது.   

3 /4

வழக்கமாக உருவாக்கப்படும் மியூசிக் வீடியோ பாணியில் இல்லாமல் எளிமையான மனிதர்களின் வாழ்வியல் கொண்டாட்டங்களை மையப்படுத்தி இதனை இயக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா.  

4 /4

அங்கித் திவாரி இசை அமைத்திருக்கும் இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித், தெலுங்கில் சாகர் பாடி இருக்கிறார்கள்.