உச்சத்தில் சனி.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு 2024ல் ராஜவாழ்க்கை

இந்து மதத்தில் சனி தேவருக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சனி தேவன் அவ்வப்போது தனது இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருப்பார், இதன் காரணமாக பல ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.

இந்து மதத்தில் சனி தேவருக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதன்படி கர்ம பலன் தரும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த 2024ல் ஐந்து ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நிதி ஆதாயங்களுடன் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும். எனவே எந்த 5 ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /6

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமையும், சொத்து வாங்குவது விற்பதில் நல்ல லாபம் உண்டாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகமும் கைகூடி வரப்போகிறது.  

2 /6

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும்.

3 /6

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.  

4 /6

சிம்மம்: சனியின் பெயர்ச்சி மாற்றத்தின் சாதகமான பலன் சிம்ம ராசிக்காரர்களிடமும் காணப்படும். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சனியால் மிகப்பெரிய யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை தரப்போகிறார் சனி பகவான்.

5 /6

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். படிப்பினைகளால் உங்களை பக்குவப்படுத்துவார். சனி பகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் அதிக சிரமங்கள் இருக்காது என்றாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். முதியோர்களுக்கு தானம் கொடுப்பது பாதிப்பை குறைக்கும்.  

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.