இரண்டாவது குழந்தை பெற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

Benefits Of Having Second Child : பலருக்கு, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Benefits Of Having Second Child : இந்தியாவை பொறுத்தவரை, பெரும்பாலானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்வர். இதற்கு, சமூக கட்டமைப்பு ஒரு பெறும் காரணமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இரண்டாவதாக ஒரு குழந்தை வேண்டும் என தோன்றும். இது குறித்து இங்கு பார்ப்போம். 

1 /8

ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டாலே போதும், எப்போது குழந்தை என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விடுவர். முதல் குழந்தை பிறந்துவிட்டாலே, அடுத்த குழந்தை எப்போது என இன்னும் சில வருடங்களில் கேட்க ஆரம்பித்து விடுவர். 

2 /8

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது, ஒரு சிலருக்கு அவர்களின் விருப்பமாக இருக்கலாம். ஒரு சிலர், சமூகத்தின் அழுத்தத்தின் காரணமாக பெற்றுக்கொள்வர். அப்படி 2வது குழந்தை பெற்றுக்கொள்வது உங்களின் விருப்பம் என்றால், அதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

3 /8

துணை: இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதால், குழந்தைகள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர். பெற்றொர்கள், அவர்களின் ஆயுட்காலம் முடிந்த பிறகும், ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து கொள்வர்.

4 /8

அனுபவம்: முதல் முறை கர்ப்பம் தரித்த போதும், தாய்மை உணர்வின் போதும் ஏற்பட்ட அனுபவம், இரண்டாவது குழந்தையை சரியான முறையில் வளர்க்க உதவும். 

5 /8

பிரச்சனையை தீர்க்கும் திறன்: முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போது, எப்படி பெற்றோராக இருக்க வேண்டும் என்ற ஐடியாவே பல பெற்றோருக்கு இருக்காது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் போது முதல் முறை என்னென்ன பிரச்சனைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று தெரிந்து விடும். 

6 /8

அன்பு: இரண்டாவது குழந்தைக்கு, முதல் குழந்தைக்கு கிடைத்ததை விட அன்பு அதிகமாகவே கிடைக்கும். இதனால், அந்த குழந்தை நல்ல சூழலில் வளரும். 

7 /8

பயம் இருக்காது: முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது இருந்த பயம், இரண்டாவது குழந்தைக்கு இருக்காது. அந்த குழந்தையும், ஒரு வயது வளர்ந்த பின்னர் இரண்டாவது குழந்தை வளர்ப்பில் உறுதுணையாக இருக்கும். இதனால், தனியாக இருக்கிறோம் என்ற பயம் தாய்க்கு இருக்காது. 

8 /8

குழந்தைகளுக்கு பயம் விலகும்: முதல் குழந்தை இருக்கும் போது, இரண்டாவது குழந்தைக்கு பெரிதாக பயம் இருக்காது. முதல் குழந்தைக்கு, இரண்டாவது குழந்தைக்கு அங்கீகரிக்கப்படாத பெற்றோராகவே இருக்கும்.