திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் இன மக்களின் நடனத்தைக் கண்டு மெய்சிலிர்த்து மகிழ்ந்த நடிகை பிரியா ஆனந்த்.
திருச்செந்தூர் சுப்பிரமனிய சுவாமி திருக்கோவிலில் நீலகிரி மாவட்டம், ஊட்டி மலைப்பகுதியைச் சேர்ந்த படுகர் இன மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் சாயரட்சை பூஜையில் சுவாமியை வழிபட்ட அவர்கள் வெளியே வந்ததும் தங்கத்தேர் முன்பு கூட்டமாக குவிந்தனர்.
அதன்பிறகு தங்களது பாரம்பரிய மலைவாழ் நடனமான படுகு நடனமாடினர். ஆண்களும், பெண்களும் கோயில் தங்கத்தேர் புறப்படும் இடம் முன்பு நடுவில் ட்ரம்ஸ், கிளாரிநெட் இசையுடன் வட்டமாக சுற்றி வந்து ஆடிய நடனத்தை அங்கிருந்த பக்தர்கள் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போனில் படமும் பிடித்தனர்.
இந்த ஆரவாரக்கூட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பிரியா ஆனந்த் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது தரிசனம் முடிந்து வெளியே வந்த நடிகை பிரியா ஆனந்த் ஆரவாரத்துடன் கோவில் முன்பு நடனமாடி கொண்டிருந்த படுகர் இன மக்களின் ஆட்டத்தினை கண்டு, நடிகை ப்ரியா ஆனந்த் மெய் சிலிர்த்து மகிழ்ந்தார்.
தொடர்ந்து, திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையிடம் நடிகை பிரியா ஆனந்த் ஆசிர்வாதம் வாங்கினார்.
மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்திருந்த பிரபல முன்னணி நடிகை பிரியா ஆனந்துடன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு சென்றனர்.