Nazriya Nayanthara : க்யூட் தோழிகளாக மாறிய நஸ்ரியா-நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்..

Actress Nazriya Nayanthara Latest Photos : நடிகைகள் நயன்தாராவும் நஸ்ரியாவும் தங்களது கணவர்களுடன் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நஸ்ரியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Actress Nazriya Nayanthara Latest Photos : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த சில நாட்களாக தனது குடும்பத்தினருடன் சேர்ந்து டூர் சென்றிருந்த இவர், தற்போது கே.ஜி.எஃப் நடிகர் யாஷ் உடன் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத ஒருவரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார், நயன். அவர் வேறு  யாருமில்லை, நம்ம க்யூட்டி நடிகை நஸ்ரியாதான். இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகைகளுள் ஒருவர், நஸ்ரியா. க்யூட் கதாநாயகியாக வலம் வந்த இவர், 2014ஆம் ஆண்டு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை  விட்டு விலகியிருந்தார். 

2 /8

சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் சினிமாவிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்த இவர், அவ்வப்போது சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். 

3 /8

கோலிவுட்டின் டாப் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, தனது குடும்பதினருடன் சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். 

4 /8

தனது பயணத்தின் போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உயிர்-உலக் உடன் செலவிட்ட தருணங்களை மகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார் நயன்தாரா. 

5 /8

தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர்தான். இவரைப்போலவே, நஸ்ரியாவும் மலையாள படங்களில் நடித்துதான் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். 

6 /8

தற்போது, நஸ்ரியாவும் நயன்தாராவும் தங்கள் கணவன்மார்களுடன் சேர்ந்து சந்தித்துக்கொண்டனர். 

7 /8

நஸ்ரியா, “நாம் சந்திக்க ஏன் இத்தனை நாட்கள் ஆனது?” என்ற கேப்ஷனுடன் ‘ரத்தமாறே’ பாட்டை போட்டு போஸ்ட் செய்திருக்கிறார். இதற்கு பல லட்சம் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

8 /8

நயன்தாரா, தற்போது ‘கே.ஜி.எஃப்’ யாஷ் உடன் இணைந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஷூட்டிங் சமயத்தில் இவர்கள் சந்தித்திருக்கலாம் என பேசப்படுகிறது.