நடிகர் சூரி மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஜோடியாக நடிக்கும் புதுப் படத்திற்கு “மாமன்”எனப் பெயர் !!

நடிகர் சூரி நடிப்பில் அட்டகாசமான தோற்றத்தில் புது பொலிவுடன் மீண்டும் படத்தில் களமிறங்கிய படத்திற்கு “மாமன்” என்று பெயர் வைத்து ரசிகர்களை புது வழிக்குக் கொண்டு செல்ல தயாரானர் சூரி. 

நடிகர் சூரி சமீபத்தில் பல்வேறு திரைப்படங்கள் மாஸ் காட்டி வருவதை ரசிகர்கள் அனைவரும் வியந்து பார்த்திருப்போம். இது அவன் இல்ல சார் இவன் வேற மாரி என்று ரசிகர்களை வேறு பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார். நடிகர் சூரியுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கு “ மாமன்” என்று நச்சென்று பெயர் வைத்தனர். 

 

1 /8

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், புதிய படத்திற்கு “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2 /8

லார்க் ஸ்டுடியோ சார்பில்  கெ. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்று “மாமன்” என்று பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டனர்.  

3 /8

விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டிய ராஜன்  நடிகர் சூரியை ஹோரோவாக வைத்து “மாம” படத்தை இயக்கவிருக்கிறார்.

4 /8

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாகத் தென்னிந்திய  நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இதில் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.   

5 /8

நடிகர் ராஜ்கிரண் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. 

6 /8

“மாமன்” என்று பெயரிடப்பட்டுப்  படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு படத்திற்கான பூஜை வேலைகள் இனிதே சிறப்பாக நடைபெற்றது.

7 /8

லார்க் ஸ்டுடியோவின் கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம்  “மாமன்” என்பது குறிப்பிடத்தக்கது. 

8 /8

இப்படத்திற்கு இசையமைக்கும்  ஹேசம் அப்துல் வஹாப், பிரம்மாண்ட ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் வழங்குகிறார். சண்டைப்பயிற்சி போன்ற கவனம் ஈர்க்கும் வேலைகளை மகேஷ் மேத்யூ செய்யவிருக்கிறார்.