8th Pay Commission: புதிய அரசு, புதிய ஊதியக்குழு.... மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஊதிய உயர்வு

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். தற்போது புதிய அரசாங்கம் அமைந்துவிட்ட நிலையில், இந்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8th Pay Commission: 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவதால் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். 8வது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்கிலிருந்து 3.68 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தும்.

1 /9

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருடன் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். புதிய அரசாங்கம் அமைந்துவிட்ட நிலையில், இனி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பல பணிகள் வேகமாக நடந்துமுடியும்.

2 /9

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள இந்த வேளையில் மத்திய அரசு ஊழியர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் சில நாட்களில் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. அதில முக்கியமான ஒன்று அடுத்த, அதாவது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கமாகும். சில நாட்களாக 8வது ஊதியக் குழு குறித்து நாட்டில் பேச்சுகள் தொடங்கியுள்ளன.

3 /9

8வது ஊதியக் குழு 2026 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழுவை அமல்படுத்துகிறது. 7வது ஊதியக்குழு 2016 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது. புதிய ஊதியக்குழுவின் அறிவிப்பு வந்தவுடன், சுமார் 2 ஆண்டுகளில் அது அமல்படுத்தப்படும். ஆகையால், இப்போது அறிவிப்பு வந்தால், அதன் அமலாக்கம் 2026 துவகத்தில் நடக்கக்கூடும். 

4 /9

ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் (Pensioners) 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆணையம் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்கும். 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரலாம். இந்தியாவில் முதல் ஊதியக் குழு ஜனவரி 1946 இல் நிறுவப்பட்டது.

5 /9

8வது ஊதியக் குழுவை உருவாக்குவது மற்றும் அமல்படுத்துவது குறித்து அரசு இதுவரை முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. 8வது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் தற்போது இல்லை என கடந்த டிசம்பரில் அரசு தெரிவித்திருந்தது. தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்து விட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையில், புதிய ஊதியக்குழு அமைப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய சாத்தியக்கூறுகள் வலுவாகவே காணப்படுகின்றன.

6 /9

8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவதால் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். 8வது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புடன், அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக உயரும் என கூறப்படுகின்றது. இது தவிர ஜூலை மாதம் அகவிலைப்படி, அதாவது டிஏ உயர்வும் (DA Hike) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

7 /9

உதாரணமாக, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18,000 ஆக இருந்தால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால் அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.8,000 அதிகரித்து ரூ.26,000 ஆக உயரும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஊதிய உயர்வின் ஒரு முக்கிய சூத்திரமாகும், இது 8வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊதிய மேட்ரிக்ஸைப் பெற உதவுகிறது.

8 /9

7வது ஊதியக் குழுவில் 2.57 மடங்கு ஃபிட்மென்ட் ஃபாக்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் சுமார் 14.29 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தவிர, குறைந்தபட்ச சம்பளமும் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 8வது ஊதியக் குழுவின் மூலம், சம்பளம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்படுவது மட்டுமல்லாமல், பணவீக்கத்தின் விளைவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களையும் அதிகரிக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.