8th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: அரசுக்கு வந்த கோரிக்கை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்?

8th Pay Commission: நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள வேளையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய அப்டேட் வந்துள்ளது. 8வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பிலிருந்து (AIRF) மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

8th Pay Commission: இந்திய ரயில்வே ஊழியர்களின் மிகப்பெரிய தொழிற்சங்கமான அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான சிவ கோபால் மிஸ்ரா, இந்திய அரசின் கேபினட் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம்/அலவன்ஸ்கள்/ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை திருத்துவதற்காக 8வது மத்திய ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என அதில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

1 /9

1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஊதியக்குழு அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.  

2 /9

வழக்கமான முறையின் படி, 7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, அடுத்த ஊதியக் குழுவை 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது. ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் உள்ளது. மோடி 3.0 அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு தற்போது வலுப்பெற்று வருகிறது.

3 /9

AIRF அரசுக்கு எழுதிய கடிதத்தில், "ஜனவரி 1, 2016 முதல் 7வது மத்திய சம்பள கமிஷன் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தியது. இருப்பினும், ஜனவரி 2016 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ.26,000 ஆக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ILC விதிமுறைகளின் பல்வேறு கூறுகள் மற்றும் Dr. Aykroyd Formula போன்றவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 கணக்கிடப்பட்டது." என்று கூறப்பட்டுள்ளது.

4 /9

குறைந்தபட்ச ஊதியத்தின் வரையறையின்படி, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட வேலைக்கு ஊதியம் பெறுபவர்களுக்கு ஒரு முதலாளி செலுத்த வேண்டிய ஊதியம் குறைந்தபட்ச ஊதியமாகும். 

5 /9

ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து, ஊழியர்கள் தரப்பில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68% ஆக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டாலும், 7வது ஊதியக்குழு 2.57%க்கு மட்டுமே பரிந்துரை செய்தது என்று கடிதத்தில் கூறப்படுள்ளது. வழக்கமாக ஊழியர்கள் தரப்புடன் நடைபெறும் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தாமல் அரசு இதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டது.

6 /9

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது 8வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊதிய மேட்ரிக்ஸைப் பெற உதவும் ஒரு முக்கிய சூத்திரமாகும். தற்போதைய 7வது ஊதியக்குழு ஊதியத்தை முன்மொழியப்பட்ட 8வது ஊதியக்குழு ஊதிய அளவோடு சீரமைப்பதே இதன் முதன்மைப் பணியாகும். 7வது ஊதியக் குழு 2.57 மடங்கு ஃபிட்மென்ட் ஃபாக்டரை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக 2016 இல் ஊழியர்களுக்கு சராசரியாக 14.29% சம்பள உயர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

7 /9

8வது ஊதியக் குழு 2026 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழுவை அமல்படுத்துகிறது. 7வது ஊதியக்குழு 2016 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது. புதிய ஊதியக்குழுவின் அறிவிப்பு வந்தவுடன், சுமார் 2 ஆண்டுகளில் அது அமல்படுத்தப்படும். ஆகையால், இப்போது அறிவிப்பு வந்தால், அதன் அமலாக்கம் 2026 துவகத்தில் நடக்கக்கூடும். 

8 /9

8வது ஊதியக் குழுவை உருவாக்குவது மற்றும் அமல்படுத்துவது குறித்து அரசு இதுவரை முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், இதற்கான கோரிக்கை அதிகரித்து வருவதாலும், 7வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதாலும், புதிய அரசு இதை பற்றி இப்போது ஒரு நல்ல முடிவை எடுக்கலாம் என கருதப்படுகின்றது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.