மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு: 4% டிஏ ஹைக்? AICPI எண்கள் மூலம் வந்த குட் நியூஸ்

7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய பணிகளில் பணியாற்றுகிறார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முறையே அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) அதிகரிக்கப்படவுள்ளது. ஜூலை 2024 இல் 4% உயர்வு பரிந்துரைக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஜூலை மாத டிஏ உயர்வை கணக்கிட ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ தரவுகள் தேவை. இதில் ஜனவரி முதல் மே 2024 வரையிலான குறியீட்டு புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.

1 /9

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. பட்ஜெட்டில் அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை என்றாலும், வெறு சில அறிவிப்புகள் மூலம் அவர்களுக்கு கூடிய விரைவில் நிவாரணம் கிடைக்கக்கூடும். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள நல்ல செய்தி என்ன? இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /9

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முறையே அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) அதிகரிக்கப்படவுள்ளது. ஜூலை 2024 இல் 4% உயர்வு பரிந்துரைக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

3 /9

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். ஜூலையில் டிஏ 4% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 54% ஆக அதிகரிக்கும். இது அவர்களது மொத்த ஊதியத்தில் நல்ல ஏற்றத்தை கொண்டு வரும். 

4 /9

ஒரு ஆண்டில் 2 முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன. 

5 /9

தற்போது ஜூலை மாத டிஏ உயர்வை கணக்கிட ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ தரவுகள் தேவை. இதில் ஜனவரி முதல் மே 2024 வரையிலான குறியீட்டு புள்ளிவிவரங்கள் வந்துள்ளன. ஜனவரி-138.9 புள்ளிகள், பிப்ரவரி- 139.2 புள்ளிகள், மார்ச்-138.9 புள்ளிகள், ஏப்ரல்-139.4 புள்ளிகள், மே-139.9 புள்ளிகள்.

6 /9

மே மாதம் வரை வந்துள்ள ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் பார்த்தால், ஜூலை 2024 முதலான அகவிலைப்படி உயர்வு சுமார் 4% இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் ஊழியர்களுக்கு நல்ல சம்பல உயர்வு கிடைக்கும்.

7 /9

அகவிலைப்படி 54% ஆனால், ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில், மாத மற்றும் ஆண்டு ஊதியத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். அகவிலைப்படி ஏற்றத்தால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மொத்த சம்பளத்தில் பெரிய ஏற்றம் இருக்கும். டிஏ உயர்வுக்கு பிறகு கிடைக்கக்கூடும் ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம். 

8 /9

ரூ.18,000 அடிப்படை சம்பளம்-மாதாந்திர உயர்வு ரூ.720-ஆண்டு உயர்வு ரூ.9,720; ரூ.50,000 அடிப்படை சம்பளம்-மாதாந்திர உயர்வு-ரூ.2,000, ஆண்டு உயர்வு-ரூ.24,000; ரூ.1,00,000 அடிப்படை சம்பளம்-மாத உயர்வு ரூ,4,000- ஆண்டு உயர்வு ரூ.48,000; ரூ.1,50,000 அடிப்படை சம்பளம்-மாத உயர்வு ரூ.6,000-ஆண்டு உயர்வு ரூ.72,000; 2,00,000 அடிப்படை சம்பளம்-மாத உயர்வு ரூ.8,000-ஆண்டு உயர்வு ரூ.96,000.

9 /9

 பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.