7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த மாதம் ஊழியர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்

7th Pay Commission Latest Updates: 1.2 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.

AICPI, அதாவது, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (All India Consumer Price Index) தரவுகளின்படி, ஜனவரி முதல் மே வரையிலான அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு இருக்கக்கூடும்.

 

1 /5

7 வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 17% அகவிலைப்படி கிடைக்கிறது. கடைசி மூன்று தவணைகளின் டிஏ உயர்வில் உள்ள முடக்கம் நீக்கப்படும்போது, இந்த அளவு 28% ஆக மாறும். இதில், 2020 ஜனவரியில் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் அதாவது ஜூலை 2020-ல் அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தது. 2021 ஜனவரியில் 4 சதவிகதம் அதிகரித்துள்ளது. இப்போது 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என்றுகூறப்பட்டுள்ளது. இவற்றின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பரில் 31 சதவீதம் (17 + 4 + 3 + 4 + 3) அதிகரிப்பு கிடைக்கும்.

2 /5

2021 மே மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் புள்ளிவிவரங்களை தொழிலாளர் அமைச்சகம் வழங்கியுள்ளது. இதில், மே 2021 ஆம் ஆண்டிற்கான குறியீட்டில் 0.5 புள்ளிகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இது 120.6 ஐ எட்டியுள்ளது.   

3 /5

இப்போது ஜூன் மாத புள்ளிவிவரங்களை ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அதில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை. டிஏ 4 சதவிகிதம் அதிகரிக்க வேண்டுமானால், அது 130 ஆக இருக்க வேண்டும். ஆனால் ஏஐசிபிஐ ஒரு மாதத்தில் 10 புள்ளிகளைத் தாண்டுவது சாத்தியமில்லை. எனவே, ஜூலை மாதத்தில் டிஏ அதிகரிப்பு 3% க்கு மேல் இருக்காது என்று கூறப்படுகின்றது.

4 /5

ஜனவரி 2021 மற்றும் ஜூலை 2021 க்கான அகவிலைப்படி பற்றிய தகவல்கள் செப்டம்பரில் அறிவிக்கப்படும் என்று ஜே.சி.எம் தேசிய கவுன்சிலின் சிவ கோபால் மிஸ்ரா கூறுகிறார். ஆகையால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இப்போது இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். 

5 /5

சிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, கிளாஸ் 1 ஊழியர்களின் டிஏ அரியர் தொகை ரூ .11,880 முதல் ரூ .37,554-க்குள் இருக்கும். அடுத்த நிலை -13 அதாவது 7 வது சிபிசி அடிப்படை ஊதிய அளவான ரூ .1,23,100 முதல் ரூ .2,15,900 அல்லது நிலை -14 வரை கணக்கிடப்பட்டால், மத்திய அரசு ஊழியரின் அகவிலைப்படி அரியர் தொகை ரூ .1,44,200 முதல் ரூ .2,18,200.-க்கு இடையில் இருக்கக்கூடும்.