Signs Of A Love Break Up : காதல் பிரேக் அப் ஆவதற்கு பல காரணங்கள் இருக்கும். பெரும்பாலும் காதலர்களே இதற்கு காரணமாக அமைவார்கள். ஒரு காதல் முடிவுபெற உள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
Signs Of A Love Break Up : காதல் அழிவதில்லை என்று கூறிய காலம் அனைத்தும் மலையேறி போய்விட்டது. ஒருவருக்கு, அவர்களின் வாழ்நாளில் 3க்கும் மேற்பட்ட காதல்கள் வருமாம். காதலில் இருக்கும் பலருக்கு, பிரேக்-அப் ஆவதற்கு முன்னரே, “ஒரு வேளை இந்த உறவு முடியப்போகிறதோ?” என்ற எண்ணம் வரும். காதல் பிரேக்-அப்பில் முடிய போவதை நாம் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
பிரேக்-அப் ஆவதற்கு சில காரணங்கள் இருக்கலாம். அதற்கு பல சமயங்களில் காதலர்களே காரணமாக இருக்கிறார்கள். பிரேக்-அப் ஆவதற்கு முன்னர் இந்த 7 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!
நீங்கள் ஏதேனும் முக்கியமான விஷயம் பேசுகையில் உங்கள் காதலன் அல்லது காதலி போனை பார்த்துக்கொண்டும், வேறு எங்காவது கவனத்தை வைத்துக்கொண்டும் இருப்பார்.
ஒரு காலத்தில், “உனக்காக மலையவே பெயர்த்து வந்து கொடுப்பேன்..” என கூறியவர் இன்று உங்களுக்காக ஒரு சின்ன துரும்பை கூட அசைக்க மாட்டார். அவர், உங்களை கவர்வதற்காக செய்து கொண்டிருந்த முயற்சிகள் குறைந்து போயிருக்கும்.
நாம் காதலிக்கும் நபர்கள் நமக்கு ஸ்பெஷலான கவனத்தை கொடுப்பர். ஆனால், உங்கள் காதல் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது என்றால் அந்த நபர் உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டார்.
உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கும். நீங்கள் சகஜமாக பேச ஆரம்பிப்பவை கூட சண்டையில் சென்று முடிந்து விடும்.
நீங்கள் காதலிக்கும் நபர், அவர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக அந்த தவறுக்கு காரணம் இதுதான், அதுதான் என ஏதேனும் சாக்கு போக்கு கூறுவார். சமயத்தில் அவர் தவறு செய்ததற்கு நீங்கள்தான் காரணம் என பழியை உங்கள் தலையிலேயே தூக்கிப்போடுவார்.
உங்களுக்குள் முன்பு இருந்தது போன்ற நெருக்கம் இப்போது இல்லாமல் இருக்கும். இருவரும் அருகில் கூட அமர மாட்டீர்கள். மனதளவிலும் உடல் அளவிலும் தூரமாக இருப்பீர்கள்.
சண்டையில் இருவரில் யாரேனும் ஒருவர் பிரிந்து விடலாம் என்பது போன்ற வார்த்தைகளை கூறுவீர்கள். இது, உங்கள் உறவு விரைவில் முடிய போகிறது என்பதற்கான கடைசி அறிகுறியாகும்.