Sharp Brain Activities : நம் மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்ள சில பழக்கங்கள் உதவும். அவை என்னென்ன தெரியுமா?
Sharp Brain Activities : உடலில் இருக்கும் அனைத்து வெளி மற்றும் உள் பாகங்களும் சரியாக இயங்க முக்கியமான பங்கு வகிக்கிறது, மூளை. நம் மூளை நம்பமுடியாத ஒன்றாகும். ஆனால் நம் உடலின் மற்ற பாகங்களைப் போலவே, அவை சிறந்த முறையில் செயல்பட அதற்கு நாம் வழக்கமான கவனிப்பும் கவனமும் தேவையாகும். மூளையை இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள சில பழக்கங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
மூளைக்கான டிப்ஸ்: மூளையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள, நாம் தினமும் செய்ய வேண்டிய 7 பயிற்சிகள். என்னென்ன தெரியுமா?
உணர்வுகள்: மனிதர்கள் அனைவருக்கும் உணர்வுகள் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கும். இந்த உணர்வுகள் நம்மை உயிர்ப்புடன் இருக்க வைக்க உதவுகிறது. அதனால், எந்த உணர்வுகளையும் அழுத்தமாக தள்ளி வைக்காமல், அதை உணர வேண்டும். இதை ஆங்கிலத்தில் Being Self Aware என்று கூறுவர்.
திறன்கள்: மூளைக்கு வேலை கொடுக்கும் சில திறன் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், குறுக்கெழுத்து பசுல்கள் ஆகியவற்றை தீர்க்கலாம்.
சர்க்கரைக்கு நோ: மூளைக்கு ஆபத்தான உணவுகளுள் ஒன்று, அதிக சர்க்கரை. எனவே, இதை உங்கள் உணவுகளில் இருந்து நீக்க வேண்டும்.
தியானம்: தியானம் செய்வது, மனதையும் மூளையையும் ரிலாக்ஸ் செய்ய உதவும். தினமும் இதை 5 நிமிடங்கள் செய்வதால் நல்ல பலன் கிடைக்குமாம்.
கற்றல்: கற்றல் என்பது, ஒரு அளவிட முடியாத ஆற்றல் ஆகும். புதிதாக ஒரு மொழி அல்லது இசைக்கருவியை கற்றுக்கொள்ளுதல் மூளையை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
ஏரோபிக் உடற்பயிற்சிகள்: உடற்பயிற்சிகள், உடலை மட்டுமல்ல மனதையும் திடமாக வைத்துக்கொள்ள உதவும். தெளிவாக யோசிக்க விரும்பினால், தினமு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளைக்கு பிரேக்: நம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல, மூளைக்கும் பிரேக் கொடுப்பது அவசியமாகும். சரியான தூக்கம், தினசரி வேலைகளில் இருந்து விடுப்பு எடுப்பது போன்றவை மூளை ஓய்வெடுக்க உதவும். (பொறுப்பு துறப்பு: இந்த செய்தியானது பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியம் உள்ளிட்டவையின் அடிப்படையில் இங்கு தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுவதற்கு முன் உங்களின் மருத்துவர நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை)