சிவ பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 7 குணாதிசயங்கள்..!

சிவ பக்தர்களாக இருப்பவர்கள் மகிழ்ச்சியான வாழ்வை பெற, தங்களின் வாழ்க்கையில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஏழு குணாதிசயங்கள் குறித்து பார்க்கலாம். 

 

சிவ பெருமான் மகாதேவ் உள்ளிட்ட சிறப்பு பெயரோடு அழைக்கப்படும் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள். இந்த பிரபஞ்சத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவர் என நம்பப்படுகிறது. தீய சக்திகளை நெருங்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய அவரின் குணாதிசயங்களின்படி, அவரை பின்பற்றுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் இந்த ஏழு குணாதிசயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

 

1 /7

சிறந்த கணவர் - சிவ பெருமான் சிறந்த கணவர். அவரைப்போல கணவர் கிடைக்க வேண்டும் என பெண்கள் வரமிருக்கும் நிலையில், கணவராக இருப்பவர்கள் சிவபெருமானைப் போல் மனைவிக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டும். மனைவியை சரிசமமாக நடத்துவதுடன், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தக்கூடியவர்களாகவும், அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். 16 திங்கட்கிழமை சிவபெருமானுக்கு விரதம் இருந்தால் இப்படியான கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம். 

2 /7

பாரபட்சம் காட்டக்கூடாது - சிவ பெருமான் பாரபட்சம் காட்டமாட்டார். தேவர்கள், அசுரர்கள் என இருதரப்புக்கும் வரம் கொடுத்த அவர், தவறு என்பதற்கு சாபமும் கொடுத்தார். அதனைப்போலவே, அதனைபோலவே சிவ பக்தர்களும் பாரபட்சம் காட்டக்கூடாது. தவறு யார் செய்திருந்தாலும் ஒருதலைப்பட்சமாக செயல்படாமல், நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

3 /7

மன்னிப்பு - சிவபெருமான் மன்னிப்புக்கு பெயர் பெற்றவர். அந்தச் சம்பவம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், எவ்வளவு பெரிய தவறு நடந்தாலும், உண்மையாக வருந்துபவர்களை மன்னிக்க அவர் தயாராக இருந்தார். திருத்திக் கொள்ள தயாராக இருந்த பெரும் பாவங்களைச் செய்த அசுரர்களையும் மன்னிக்க தயாராக இருந்தவர். அதனால், தவறுகளை மன்னிக்க தயாராக இருக்க வேண்டும். இந்த குணாதிசயத்தை சிவ பக்தர்களும் கடைபிடிப்பது சாலச்சிறந்தது.  

4 /7

ஆசைகள் வேண்டாம் - சிவபெருமான் எளிமையின் உருவம். அதனைப்போல் ஆசைகளின் பிடியில் சிக்கி தவிக்காமல் அவற்றை புறந்தள்ளி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழுங்கள். ஆடம்பர உடைகள் உள்ளிட்ட எதற்கும் ஆசைப்படாமல், ஆழ்ந்த தியானமும், ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையும் வாழ பழகிக் கொள்ளுங்கள்.

5 /7

இரக்க குணம் - சிவ பெருமான் இரக்க குணம் கொண்டவர். தன்னிடம் மன்றாடி வேண்டுபவர்களுக்கு வரம் கொடுக்க தயங்க மாட்டார். மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளக்கூடியவர்.அவரைப் போல சிவ பக்தர்களும் பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியை காண முற்பட வேண்டும். 

6 /7

சுயக்கட்டுப்பாடு - உணர்ச்சிகளையும், ஆசைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலுக்கு பெயர் பெற்றவர் சிவ பெருமான். ஆசை மற்றும் புலன்களை அடக்க தியானப்பயிற்சி செய்யக்கூடியவர். சிவ பக்தர்களும் இதனை பின்பற்றினால் வாழ்க்கையில் சுயக்கட்டுப்பாடு மேலோங்கும்.   

7 /7

அமைதி - சிவபெருமான் அமைதியின் அடையாளமாக இருக்கக்கூடியவர். அந்த அமைதி, மன சாந்தியின் அடையாளம் என்பதால் அதனை சிவ பக்தர்கள் பின்பற்றுங்கள். இது எந்தவொரு சூழலையும் தெளிவுடன் கையாள உதவியாக இருக்கும். வெளியுலகின் தூண்டல்களில் இருந்து உணர்ச்சிவசப்படாமல், முதிர்ச்சியாக சூழலை கைளாளும் திறன் கிடைக்கும்.