ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலேயே செய்யக் கூடியே 6 உடற்பயிற்சிகள்!

நாம் வீட்டிலிருந்தபடியே எந்தவித கருவிகளையும் பயன்படுத்தாமல் சில உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளமுடியும்.

நாம் வீட்டிலிருந்தபடியே எந்தவித கருவிகளையும் பயன்படுத்தாமல் சில உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளமுடியும்.

 

1 /6

Star Plank : பொதுவாக பிளாங்க் பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.  அதிலும் குறிப்பாக இந்த Star Plank உங்கள் உடலை வலுவாக்குகிறது, இதனை செய்ய புஷ்-அப் செய்வது போல் படுத்துக்கொண்டு கால்கள் மற்றும் கைகளை அகலமாக வைத்துக்கொண்டு உடம்பை சிறிது நேரம் அதே பொசிஷனில் நிலைநிறுத்தி வைக்கவேண்டும்.  

2 /6

Burpee : உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை இந்த Burpee பயிற்சி எரிக்கிறது.  இதனை செய்ய நேராக நின்றுகொண்டு ஸ்குவாட் செய்து பின்னர் தரையில் படுத்து புஷ்-அப் செய்வது போல செய்து ஜம்ப் செய்து எந்திரித்து நிற்க வேண்டும்.  

3 /6

Spiderman Push-up : உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இது ஒரு சிறந்த பயிற்சி.  சாதரணமாக புஷ்-அப் செய்வது போன்ற பொசிஷனில் இருந்துகொண்டு, மவுன்டெயின் க்ளைம்பிங் பயிற்சி செய்வது போன்று புஷ்-அப் செய்யும்போது கால்களை மட்டும் சுவற்றில் ஏறுவது போன்று செய்யவேண்டும்.  

4 /6

Cross Crunch : Crunch பொதுவாக வயிற்று சதைகளை குறைக்க உதவுகிறது.  bicycle crunch போல தான் இந்த Cross Crunch பயிற்சியை செய்ய வேண்டும், ஆனால் அதில் சிறிது மாற்றம் என்னவென்றால் காலை அசைக்காமல் தலையை மட்டும் அசைக்க வேண்டும்.  

5 /6

Glute Bridge :இடுப்பை வலுவாக்கவும், பின்பக்க தசைகளை குறைக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது.  இதனை செய்ய தரையில் கால்களை மடக்கி வைத்துக்கொண்டு நேராக படுக்க வேண்டும், பின்னர் இடுப்பை மட்டும் மேலே உயர்த்தி சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து இடுப்பை கெல்லே இறக்க வேண்டும்.  

6 /6

V-Sit : இது வயிறுக்கு சிறந்த பயிற்சியாகும்.  ஈதனை செய்ய தரையில் நேராக படுத்துக்கொண்டு, ஒரே சமயத்தில் தலையையும், கால்களையும் சேர்த்து தூக்கி v வடிவத்தில் உடலை வைக்க வேண்டும்.