5 சுலபமான வழிகள் மூலம் PF பணத்தை சரி பார்க்கலாம்!

ஊழியர்களால் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை சரிபார்க்க சிரமப்படாமல் வீட்டிலிருந்தடியே அதனை சரிபார்த்து கொள்ளமுடியும்.

1 /5

இபிஎஃப்ஓ தளத்திற்குள் சென்று பணியாளர் பகுதியிலுள்ள மெம்பர் பாஸ்புக் என்பதை க்ளிக் செய்து அதில் உங்களது யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டை லாக் இன் செய்து எவ்வளவு தொகை உள்ளது என்பதை சரிபார்க்கலாம்.  

2 /5

யூனிஃபைடு போரட்டலில் உங்களது யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு பிஎப் பாஸ்புக் என்பதை திறந்து உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை சரிபார்க்கலாம்.  

3 /5

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு EPFOHO UAN ENG என்று எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.  

4 /5

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு அழைத்தால் ஒரு சில நொடிகளில் அந்த அழைப்பு கட் செய்யப்பட்டு உங்கள் பிஎஃப் இருப்பு குறித்த விவரம் அனுப்பப்படும்.  

5 /5

மொபைலில் UMANG APP-ஐ டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டு அதில் பிஎஃப் இருப்பு மற்றும் இதர இபிஎஃப் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்,