Leaves Which Reduces Uric Acid: தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், நமது உடலில் யூரிக் அமிலப் பிரச்சனை ஏற்படுகிறது. இதிலிருந்து சட்டுனு விடுபட இந்த ஐந்து பச்சை இலைகளை கட்டாயம் சாப்பிடுங்கள்.
உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் நாம் மருத்துவரிகளின் ஆலோசனையின் பேரில் சில மருந்துகளை உட்கொள்ளகிறோம். ஆனால் இன்று நாம் மருந்துகளுக்கு பதிலாக ஐந்து சூப்பர் வீட்டு வைத்தியத்தை கொண்டு வந்துள்ளோம், அவற்றை உட்கொள்வதன் மூலம் உடலில் அதிகரித்த யூரிக் அமிலத்தை நம்மால் குறைக்க முடியும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்...
கொத்தமல்லி இலைகள் பல உணவுகளில் பயன்படுத்தப்படும். இந்த இலை யூரிக் அமிலத்தை அகற்றவும் உதவும். கொத்தமல்லி இலைகளை மருந்தாக சாப்பிடலாம். எனவே கொத்தமல்லி இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவையும் யூரிக் அமிலத்தையும் குறைக்கிறது.
பிரிஞ்சி இலை பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. பிரிஞ்சி இலை அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. பிரிஞ்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்த குடித்தால் யூரிக் அமிலத்தை படிப்படியாகக் குறைக்கலாம்.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்க உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளத் தொடங்குங்கள். கறிவேப்பிலையை சாப்பிடுவது இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை படிப்படியாகக் குறைக்க உதவும்.
வெற்றிலையை மென்று சாப்பிடுவதும் சிறுநீர் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க அதிகாலையில் வெற்றிலையை மென்று சாப்பிடலாம். வெற்றிலையை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள யூரிக் அமில படிகங்கள் நீங்கும்.
துளசி இலைகளை உட்கொள்வதால் பல தொற்று நோய்கள் குணமாகும். அதேபோல், யூரிக் அமிலத்தைக் குறைப்பதிலும் துளசி நன்மை பயக்கும். இதன் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் யூரிக் அமிலத்தின் அளவை வெகுவாகக் குறைக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.