இந்தியாவில் கிளாம்பிங் செல்ல ஏற்ற அற்புதமான 5 இடங்கள் !

கிளாம்பிங் என்பது ஆடம்பரமாக சகல வசதிகளுடன் இயற்கை பொருந்திய சூழ்நிலையில் விடுமுறையை கழிப்பதாகும்.

1 /5

கோவா : நண்பர்களுடன் சென்று குதூகலமாக இருக்க ஏற்ற ஒரு சிறப்பான இடம் தான் கோவா. கடற்கரை பகுதியில் ஆடம்பரமாக சகல வசதிகளுடன் தங்கும்படியான இடங்கள் இங்குள்ளது. காலையில் எழுந்தவுடன் கிரிஸ்டல் போல தெளிவாகவுள்ள நீரின் அழகையும் பல ஆச்சரியங்களையும் இங்கு கண்டு ரசிக்கலாம்.

2 /5

லடாக் : கிளாம்பிங் செய்வதற்கு மிக பொருத்தமான இடமென்றால் அது லடாக் தான். அழகிய பனி சூழ்ந்த மலைகளுக்கு இடையே உங்கள் விடுமுறையை நீங்கள் கழிக்கலாம். பாங்காங் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கு பகுதிகளில் சொகுசான படுக்கைகள் கொண்ட அறை, போர்ட்டலூக்கள் மற்றும் ஆடம்பரமான தாங்கும் இடங்கள் உள்ளன.   

3 /5

ரந்தம்பூர் : ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சவாய் மதோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ரந்தம்பூர். புலிகள் நிறைந்த இப்பகுதிக்கு செல்வது திகிலான சவாரியாக இருக்கும். ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள பழமையான ரந்தம்பூர் கோட்டை சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது. இந்த இடங்களில் ஆடம்பரமான படுக்கையறைகள் கொண்ட தங்குமிடங்கள் உள்ளது. 

4 /5

மஷோப்ரா : ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது மஷோப்ரா. இது கிளாம்பிங் செய்ய ஏற்ற பகுதியாக கருதப்படுகிறது. இங்கு பல்வேறு விதமான சாகசங்களை செய்யலாம், அதோடு தங்குவதற்கு வசதியான இடங்கள் உள்ளது. மேலும் சகல வசதிகளுடன் அழகிய மூங்கில் குடில்கள் அமைந்துள்ளது.

5 /5

வயநாடு : கேரளாவில் அமைந்துள்ள வயநாடு இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அற்புதமான இடமாகும். கிளாம்பிங் செல்ல ஏற்ற இடமான இங்கு நவீன வசதிகளுடன் கூடிய சொகுசான குளிரூட்டப்பட்ட தங்குமிடங்கள் உள்ளது.