2022-ல் 100 கோடி வசூல் செய்த படங்கள்! வலிமை படம் இடம் பிடித்ததா?

2022ம் ஆண்டில் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகிய எந்தெந்த திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது பற்றி பார்ப்போம்.

1 /5

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோரது நடிப்பில் கடந்த ஏப்ரல்-14ம் தேதி வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்தது.  

2 /5

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான 'விக்ரம்' படம் தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

3 /5

மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டெம்பர் 30ம் தேதி வெளியான வரலாற்று திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.  இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

4 /5

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா ஆகியோரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியான 'வலிமை' படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்தது.

5 /5

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் ஆகியோரது நடிப்பில் கடந்த ஏப்ரல்-14ம் தேதி வெளியான 'கேஜிஎஃப்-2' திரைப்படம் தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்தது.