பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 4, 2018, 02:50 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் title=

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துக்கொண்டு வருகிறது. இன்று பெட்ரோலின் விலை டெல்லியில் ரூ. 73.95-ம், கொல்கத்தாவில் ரூ.76.66-ம், மும்பையில் ரூ. 81.80-ம், சென்னையில் ரூ. 76.72 என்று விற்க்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் உயர்வை திரும்ப பெற வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

‘‘நான் கடுமையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் பொதுமக்களை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வந்து பொது மக்களின் சுமையை மத்திய அரசு குறைக்க வேண்டும்’’ என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

Trending News