எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் இலங்கை கடல் தொழிலாளர்கள்; இந்தியா உதவ வேண்டும் என கோரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடுமையாக உள்ள நிலையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடல் தொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 9, 2022, 01:06 PM IST
எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் இலங்கை கடல் தொழிலாளர்கள்; இந்தியா உதவ வேண்டும் என கோரிக்கை title=

வடபகுதி கடல் தொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டும் என்றும் அதற்கான பணத்தினை இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோம் என்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று 08 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அன்னராசா இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடுமையாக உள்ள நிலையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடல் தொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்றும் அந்த பாதிப்பு கடல் தொழிலில் ஈடுபடும் சமூகத்தை பட்டினியை நோக்கி தள்ளுகின்றது என அவர் வருத்தம் தெரிவித்தார். கடந்த 60 நாட்களுக்கு மேல் தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என்பதால், 80%  கடல் தொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில், வாழ்வாதாரம் கேளிவிக்குறியாகியுள்ளது.

மண்ணெண்ணெய் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று சொல்லி ஏக்கத்தோடு இரண்டு மாதங்களை கடந்து விட்ட நிலையில், மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. கடல் தொழில் சமூகம் பட்டினியை நோக்கி நகர்கின்றது. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை என வேதனை வெளியிட்டார்.

மேலும் படிக்க |  இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை 

எரிபொருள் பற்றாக்குறை விரைவில் தீர்க்கபடும் என  கூறப்பட்டாலும் கூட கடல் தொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் இன்று வரை கிடைக்கவில்லை. கடந்த வாரம் 6600 லிட்டர் மண்ணெண்ணெய் யாழ் மாவட்ட கடல் தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதை ஆறு கடல் தொழிலாளர் சங்கங்களுக்கு பகிர்ந்தளித்திருக்கின்றோம். நூற்றுக்கணக்கான சங்கங்கள் எரிபொருளின்மையால் தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. இலங்கை அதிபர், எரிசக்தி அமைச்சர், கடல் தொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து மண்ணெண்ணெய் விரைவாக வழங்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளார்

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற நல்லூர் மகோற்சவம் இடம்பெற்று வருவதனால், சைவ உணவு பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். அதனால் மீன் தேவை குறைந்து இருக்கின்றது. அதனால் எங்கள் பாதிப்பு வெளித்தெரியவில்லை. அதனை தாண்டி நாங்களே உணவை உண்ண முடியாத நிலையில் இருக்கின்றோம்.  இதனை மாவட்ட நிர்வாகம் உரிய தரப்புகளின் கவனத்திற்கு கொண்டு சென்று  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் யாரிடம் நிவாரணம் கேட்கவில்லை. உதவி கேட்கவில்லை மண்ணெண்ணெய் தந்தால் போதும் கடல் தொழில்  சமூகம் அதற்கான பணத்தை கொடுத்து வாங்கிக் கொள்ளும்.  இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவிடமும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிடமும் நான் ஒரு பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன்  என அவர் மேலும் தெரிவித்தார்.

வடபகுதி கடல் தொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோம். வடபகுதி கடல் தொழிலாளர்கள் மீது கருணை காட்டி இந்தியத் தூதரகம் விரைந்து செயற்பட வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News