இலங்கையில் தீவிரமடையும் நெருக்கடி: அதிபரின் முடிவுகளை விமர்சிக்கும் எதிர்கட்சிகள்

Sri Lanka Economic Crisis: இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை (மே 6, 2022) அவசரகால நிலையை அறிவித்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2022, 03:58 PM IST
  • இலங்கை தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.
  • இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவசரகால நிலையை அறிவித்தார்.
  • இது எதிர்க்கட்சி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்து உடனடி விமர்சனத்திற்கு உள்ளானது.
இலங்கையில் தீவிரமடையும் நெருக்கடி: அதிபரின் முடிவுகளை விமர்சிக்கும் எதிர்கட்சிகள் title=

மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஒரு நாள் அரசாங்க எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை (மே 6, 2022) அவசரகால நிலையை அறிவித்தார்.

"இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை மற்றும் பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களை கருத்திற்கொண்டு அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார்" என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடனடியாக அமுலுக்கு வரும் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்து உடனடி விமர்சனத்திற்கு உள்ளானது.

ராஜபக்சவை ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, அவசரகாலச் சட்டம் "நெருக்கடிக்கு எந்தவொரு தீர்வையும் தேடுவதற்கு எதிரானது" என்றார்.

மேலும் படிக்க | இலங்கையில் வலுக்கும் நெருக்கடி: ‘உள்ளாடை போராட்டத்தை’ துவக்கிய பொதுமக்கள் 

கோட்டாபய ராஜபக்சவின் முடிவு குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம், பொது எதிர்ப்பை முடக்குவது நெருக்கடிக்கு தீர்வாகாது என்று சுட்டிக்காட்டிய அதே வேளையில், அரசாணையை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியது.

பிஏஎஸ்எல் தனது முடிவிற்கான காரணத்தை விளக்குமாறு அதிபரிடம் கேட்டுக்கொண்டதுடன், இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறும் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

“அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் பிரகடனத்தைத் திரும்பப் பெறவும், மக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரம் மற்றும் வெளியீட்டுச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் போன்ற அம்சங்களை உறுதி செய்யுமாறும் நாங்கள் அவரை கேட்டுக்கொள்கிறோம். மக்களின் இறையாண்மை மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் அரசு அல்லது அதன் முகவர்களால் அவை மீறப்படாமல் இருப்பதையும் அவர்கள் உறுதி செய்ய வெண்டும்" என்று வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ கூறியது. 

இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் சங்கம் உறுதியளித்தது. எவ்வாறாயினும், மக்கள் அமைதியாக இருக்கவும், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

முன்னதாக ஏப்ரல் 1 ஆம் தேதி ராஜபக்ச அவசரகால நிலையை அறிவித்தார். ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகு அதை திரும்பப் பெற்றார்.

இலங்கை, குறிப்பாக, கொவிட்-19 தொற்றுநோய், எண்ணெய் விலை உயர்வு மற்றும் அரசாங்க வரி குறைப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி, இலங்கையில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு இருப்புகளில் $50 மில்லியன் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிணை எடுப்புக்காக சர்வதேச நாணய நிதியத்தையும் இலங்கை அணுகியுள்ளது.

மேலும் படிக்க | பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை: உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News