சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: சென்னை - சிங்கப்பூர் வழிதடத்தில் சூடுபிடிக்கும் டிக்கெட் முன்பதிவு

அண்மையில், சிங்கப்பூர் அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்ததைத் தொடர்ந்து, விமான பயணத்தை மேற்கொள்ள பலர் ஆர்வமாக பயண திட்டத்தை வகுத்து டிக்கெட் எடுக்க தொடங்கியுள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 15, 2022, 07:29 PM IST
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: சென்னை - சிங்கப்பூர் வழிதடத்தில் சூடுபிடிக்கும் டிக்கெட் முன்பதிவு title=

அண்மையில், சிங்கப்பூர் அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்ததைத் தொடர்ந்து, விமான பயணத்தை மேற்கொள்ள பலர் ஆர்வமாக பயண திட்டத்தை வகுத்து டிக்கெட் எடுக்க தொடங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்தியாவின் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது . குறிப்பாக, சென்னை, சிங்கப்பூர் இடையே அதிகரித்து வரும் தேவை காரணமாக தொடர்ந்து தினசரி விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிலும், குறிப்பிட்ட சில நாட்களில் இரண்டு விமான சேவையையும் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் SQ 529, SQ 525 ஆகிய விமானங்களையும் இயக்கி வருகிறது.

மேலும் படிக்க | சிங்கப்பூரில் வேலை, கை நிறைய சம்பளம்: ஏமாற்றிய நபர், பணத்தை பறிகொடுத்த அப்பாவிகள்

இந்த வழித்தட விமான சேவைக்கான மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை மற்றும் பயண டிக்கெட் முன்பதிவு, கட்டணம் உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு என்ற https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வழக்கமாக, ஆண்டின் நடுப்பகுதியில் தான் வெளிநாட்டுப் பயணங்கள் சூடுபிடிக்கத் தொடங்கும். ஆனால், இம்முறை அதற்கு முன்னதாகவே அதிக அளவில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது.

சுற்றுப்பயணத்துக்காக மட்டுமின்றி, தனிப்பட்ட வர்த்தக மற்றும் தொழில் காரணங்களுக்காகவும் பலர் பயணத்தை திட்டமிட்டு வருகின்றனர். வெளிநாடு பயணங்களை பொறுத்தவரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவைகளை பலர் நாடுவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் படிக்க | துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: விமான டிக்கெட் விலையில் பம்பர் தள்ளுபடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News