கனடாவில் தாக்கப்பட்ட சீக்கிய மாணவர்! தலைப்பாகையைக் கிழித்து அத்துமீறல்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், இந்தியாவைச் சேர்ந்த 21 வயது சீக்கிய மாணவர் ஒருவரை, அவரது தலைப்பாகையைக் கிழித்து, அவரது தலைமுடியை பிடித்து நடைபாதையில் இழுத்துச் சென்றதாக ஒரு ஊடக அறிக்கை ஒன்று  தெரிவித்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 20, 2023, 08:39 PM IST
  • சாலையோரத்தில் இருந்த "அழுக்கு பனி" குவியலில் ககன்தீப்பை விட்டு சென்ற கும்பல்.
  • ககன்தீப் சிங் என்ற சீக்கிய நபர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்குச் செல்லும் போது தாக்கப்பட்டதாக CTV செய்திகள் தெரிவிக்கின்றன.
  • ககன்தீப் சிங் பேசும் போது கூட மென்மையான குரலில் மட்டுமே பேசுவார்.
கனடாவில் தாக்கப்பட்ட சீக்கிய மாணவர்! தலைப்பாகையைக் கிழித்து அத்துமீறல்! title=

டொராண்டோ: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், இந்தியாவைச் சேர்ந்த 21 வயது சீக்கிய மாணவர் ஒருவரை, அவரது தலைப்பாகையைக் கிழித்து, அவரது தலைமுடியை பிடித்து நடைபாதையில் இழுத்துச் சென்றதாக ஒரு ஊடக அறிக்கை ஒன்று  தெரிவித்துள்ளது. ககன்தீப் சிங் என்ற சீக்கிய நபர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்குச் செல்லும் போது தாக்கப்பட்டதாக  CTV செய்திகள் தெரிவிக்கின்றன. கவுன்சிலர் மோகினி சிங்  இது குறித்து கூறுகையில், ‘தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே தான் கேள்விப்பட்டு ககன்தீப்பை பார்க்க சென்றேன். நான் அவரைப் பார்த்ததும் திகிலடைந்தேன். அவர் பேசும் போது கூட மென்மையான குரலில் மட்டுமே பேசுவார். அப்படிப்பட அவரால் வாய் திறக்க  கூட முடியவில்லை," என்று அவர் செய்தி சேனலுக்கு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சீக்கிய இளைஞனின் கண்கள் வீங்கியிருப்பதாகவும், அவருக்கு உடல் வலி அதிகமாக இருப்பதாகவும் மோகினி சிங் மேலும் கூறினார். ககன்தீப் மளிகைக் கடையிலிருந்து, இரவு 10:30 மணியளவில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் 12 முதல் 15 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் அவர் எதிர்கொண்டதாக கவுன்சிலர் கூறுகிறார். 

ககன்தீப் பேருந்தை விட்டு இறங்கிய போது, அவர்கள் அவரைப் பின்தொடர்ந்து இறங்கி, பேருந்து புறப்படும் வரை காத்திருந்தனர். பின்னர் அவர்கள் அவரை முற்றுகையிட்டனர். அவர்கள் அவரது முகத்திலும், அவரது விலா எலும்புகளிலும், கைகளிலும், கால்களிலும் அடித்து, பின்னர் அவரது தலைப்பாகையைப் பிடித்து, முடியை இழுத்து இழுத்துச் சென்றனர்." மோகினி சிங்  மேலும் கூறுகையில், சாலையோரத்தில் இருந்த "அழுக்கு பனி" குவியலில் ககன்தீப்பை விட்டு  சென்ற போது, அந்த கும்பல் அவரது தலைப்பாகையை எடுத்துச் சென்றது. சீக்கியர்களுக்கு தலைப்பாகை மிக மிக முக்கியமானது. அதை எடுத்துச் செல்வது மிக மிக மோசமான நடவடிக்கை என கூறினார்.

மேலும் படிக்க | பெல்ஜியம் குடிமகனான பிறகும் இந்திய பாஸ்போர்டை பயன்படுத்திய நபர் இந்தியா வர தடை!

சுயநினைவு திரும்பிய பிறகு,  ககன்தீப் போன் செய்து 911க்கு அழைத்தார். மோகினி சிங் கூறுகையில், ககன்தீப்பின் நண்பர்களும் சக சர்வதேச மாணவர்களும் இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்து அச்சமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிறுத்தத்தில் கூடி அவர்கள் தங்கள் சமூகத்தில் பாதுகாப்பு இல்லாதது போல் உணர்வதாக கூறினர். கங்கன்தீப் சீக்கியர் என்பதும், இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும் தாக்குதலுக்கு "சந்தேகத்திற்கு இடமின்றி" காரணம் என்று கவுன்சிலர் கூறுகிறார்.

இதற்கிடையில், கெலோவ்னா நகர போலீஸ் இது குறித்து கூறுகையில், இந்த சம்பவத்தை காவல் துறை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. எங்கள் நகரத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடந்துள்ளன என்று கவலை கொள்கிறது. மிக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று செய்தித் தொடர்பாளர் மற்றும் கான்ஸ்டபிள் மைக் டெல்லா-பலோரா கூறினார்.

மேலும் படிக்க | வீட்டில் இருந்த படியே நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணபிப்பது எப்படி?

மேலும் படிக்க | 5 நாள்களில் பாஸ்போர்ட் வெரிபிகேஷன்... எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News