என் இதயம் நொறுங்கிவிட்டது, தாய் நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் : இலங்கை பாடகி

Sri Lanka Crisis: இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்: இலங்கை பாடகி யோகானி

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 12, 2022, 11:35 AM IST
  • இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.
  • ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்கள் தற்போது வன்முறையின் வெறியாட்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.
  • ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது: இலங்கை பாடகி யோகானி
என் இதயம் நொறுங்கிவிட்டது, தாய் நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் : இலங்கை பாடகி title=

மும்பை: ‘‘இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ என மும்பையில் உள்ள இலங்கை பாடகி யோகானி கூறியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டங்கள் தொடர்கின்றன. 

நமது அண்டை நாடான இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்கள் தற்போது வன்முறையின் வெறியாட்டத்தை அனுபவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், இலங்கையில் சிக்கித் தவிக்கும் மக்கள் குறித்த கவலை உலகளாவிய அனைவரிடையிலும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், இலங்கைக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டி கொடுக்கும் திட்டத்தை அந்நாட்டு பாடகி யோகானி கடந்த மாதம் வெளியிட்டார். இதற்கு நிதியுதவி அளிக்கும்படி, தனது ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். 

மேலும் படிக்க | தமிழ் இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை: விஜயகாந்த் அறிக்கை 

இவரது ‘மனிகே மஹே ஹித்தே’ என்ற சிங்கள பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும். இணையத்தில் இது பட்டையை கிளப்பி வருகிறது. 

தற்போது மும்பையில், இந்திய இசை கலைஞர்களுடன் பணியாற்றி வரும் இலங்கை பிரச்சனை குறித்து பேட்டி அளித்தார். அதில் அவர், “பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் நடக்கும் சம்பவங்களால் மனதுடைந்து போயுள்ளேன். நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிதியுதவி மட்டும் அல்ல மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பது முக்கியம். 

எனது நாட்டு மக்களுக்கு உதவ, எனது குரலை பயன்படுத்துவேன். நான் எனது நாட்டின் மீது அதிக பற்று வைத்துள்ளேன். நான் மும்பையில் இருந்தாலும், எனது குடும்பம், நண்பர்கள், என்னுடைய இசைக்குழுவினர் எல்லாம் இலங்கையில்தான் உள்ளனர். எனது தாய் நாட்டின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

இலங்கை நெருக்கடி மற்றும் வன்முறை போராட்டங்களால் இலங்கை மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மக்களுக்காக உலகின் பல மூலைகளிலிருந்தும் பல குரல்கள் எழும்பிய வண்ணம் உள்ளன. 

மேலும் படிக்க | இலங்கைத் தமிழர்களை மத்திய மாநில அரசுகள் காத்திட வேண்டும்: டிடிவி தினகரன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News