மலேஷியா கோவில் கும்பாபிஷேகத்தில் நடந்த சோகம்; பெண் ஒருவர் பலி

மலேசியாவில் உள்ள ஈப்போ மாநிலத்தில் அமைந்துள்ள   அருள்மிகு விசாலாட்சி சாமேத காசி விஸ்வநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 17, 2022, 02:54 PM IST
மலேஷியா  கோவில் கும்பாபிஷேகத்தில்  நடந்த சோகம்; பெண் ஒருவர் பலி title=

மலேசியாவில் உள்ள ஈப்போ மாநிலத்தில் அமைந்துள்ள   அருள்மிகு விசாலாட்சி சாமேத காசி விஸ்வநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த இந்து கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது சிலையின் ஒரு துண்டு 53 வயது பெண்ணின் மேல் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காலை 9.50 மணியளவில் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலின் உச்சியில் இருந்து சிலையில் இருந்து துண்டு ஒன்று விழுந்ததில் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹித் தெரிவித்தார்.

மேலும் படிக்க | "அயன் சூர்யாவை" மிஞ்சிய புத்திசாளி! வைரலான வீடியோ 

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். "அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக  அந்த பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்," என்று அவர் காவல் துரை அதிகாரி அறிக்கை  ஒன்றில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவில், கோவில் மைதானம் முழுவதும் பக்தர்களால் நிரம்பியிருப்பதையும், அப்போது மேலிருந்து துண்டு ஒன்று விழுவதையும் காட்டுகிறது, இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது

இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைபடுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | துபாயிலிருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்த இளைஞர்- லாட்ஜில் அடைத்து வைத்து கொடுமை..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News