துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த விற்பனையில் 90% வரை தள்ளுபடி

Dubai Super Sale: மே 27 முதல் 29 வரை, துபாய் மால், துபாய் மெரினா மால் மற்றும் துபாய் ஹில்ஸ் மால் ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று நாட்களுக்கு நடக்கும் விற்பனையில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2022, 06:05 PM IST
  • 3 நாள் சூப்பர் சேல் துபாயில் மீண்டும் தொடங்கியுள்ளது.
  • மே 27 முதல் 29 வரை இந்த விற்பனை நடக்கும்.
  • விற்பனையில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
துபாய் தமிழர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த விற்பனையில் 90% வரை தள்ளுபடி title=

துபாய்: நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 3 நாள் சூப்பர் சேல் துபாயில் மீண்டும் தொடங்கியுள்ளது. மே 27 முதல் 29 வரை, துபாய் மால், துபாய் மெரினா மால் மற்றும் துபாய் ஹில்ஸ் மால் ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று நாட்களுக்கு நடக்கும் விற்பனையில் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

இந்த விற்பனையில் ஃபேஷன் பிராண்டுகள், அழகு சாதன பிராண்டுகள் மற்றும் லைஃப்ஸ்டைல் ​​பிராண்டுகளில் மூன்று இடங்களிலும் தள்ளுபடிகள் கிடைக்கும்.

எங்கு, எப்போது விற்பனை?
- துபாய் மாலில், சில்லறை விற்பனை நிலையங்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும். எஃப்&பி தளங்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரை திறந்திருக்கும். 

- துபாய் மெரினா மாலில், சில்லறை விற்பனை நிலையங்கள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், எஃப்&பி இடங்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும். 

- துபாய் ஹில்ஸ் மாலில், ஷாப்பிங் செய்பவர்கள் மற்றும் உணவருந்துபவர்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரை அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கலாம்.

மேலும் படிக்க | இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450 

அல்-ஃபுதைம் மால்களின் ஒரு பகுதியான ஃபெஸ்டிவல் பிளாசாவும் இந்த நாட்களில் மூன்று நாள் விற்பனையை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் Dh500 அல்லது அதற்கு மேல் செலவழித்தால் ஒரு லக்கி டிராவில் பங்கு கொள்ளலாம். இதில் அவர்களுக்கு Dh250 மதிப்புள்ள பரிசு அட்டையை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த மூன்று நாட்களில், தினமும் 10 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஃபெஸ்டிவல் பிளாசா, ஜெபல் அலியில் ஷாப்பிங் செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்படும். 

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில், இந்த நாட்களில் மால் ஸ்டோர்களில் திர்ஹம் 1,000 அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் முதல் 200 பேருக்கு 10 சதவீத கேஷ்பேக் அளிக்கப்படும். காலை 11 மணி முதல் 12 மணி வரை அல்லது இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை ஷாப்பிங் செய்பவர்கள் 20 சதவீதம் கேஷ்பேக் பெறலாம்.

எமிரேட் முழுவதும் உள்ள மற்ற ஷாப்பிங் மால் சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இதே போன்ற தள்ளுபடிகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபுதாபியில், தி கலேரியா அல் மர்யாஹ் ஐலேண்ட் மே 27 முதல் 29 வரை மூன்று நாள் விற்பனையைத் தொடங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

ஈத் அல் பித்ர் விடுமுறைக்கு நாடு முழுவதும் உள்ள மால்கள் தள்ளுபடியை வழங்கிய ஒரு மாதத்திற்குள் மூன்று நாள் சூப்பர் விற்பனை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1,300 க்கும் மேற்பட்ட விருப்பமான சில்லறை விற்பனையாளர் பிராண்டுகள், 200 க்கும் மேற்பட்ட சர்வதேச உணவுச் சங்கிலிகள், முழு குடும்பத்திற்குமான பொழுதுபோக்கு என பல அம்சங்களைக் கொண்டுள்ள துபாய் மால் நகரின் மிகவும் பிரியமான ஷாப்பிங் இடங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

இவைமட்டுமல்லாமல், விருந்தினர்கள் துபாய் மாலில் தங்கள் ஷாப்பிங் அனுபவத்திற்கு முன்னதாக சிறந்த சலுகைகளையும் பெறலாம். செயலி மூலம் தங்களுக்குப் பிடித்த கடைக்கு அருகில் உள்ள பார்க்கிங்கையும் கண்டறியலாம். கூடுதலாக, ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்பவர்கள் ஷாப் & டிராப் மற்றும் டெலிவரி சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அவர்கள் ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஷாப்பிங் அனுபவத்தை பெற முடியும்.

மேலும் படிக்க | இந்த தேதிகளில் அவசரகால பாஸ்போர்ட் சேவை முகாம்கள்: துபாய் இந்திய துணைத் தூதரகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News