NRI Investment Options: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான டாப் முதலீட்டு திட்டங்கள்

NRI Investment: என்ஆர்ஐ முதலீட்டாளருக்கு எது சிறந்த முதலீடாக இருக்கும் என்பது மிகவும் பொதுவான கேள்வியாகும். இதற்கான பதில், அவர்களின் முதலீட்டு இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் தன்மை மற்றும் வருமானம் பற்றிய எதிர்பார்ப்புகளைப் பொறுத்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 11, 2022, 03:33 PM IST
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) பல்வேறு முதலீட்டு வழிகள் உள்ளன.
  • இவற்றில் எந்த வழி சிறந்த வழியாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்பது எளிதல்ல.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முழுமையான நிதி பாதுகாப்பு மற்றும் சீரான வருமானத்தை வழங்கும் ஒரு சிறந்த முதலீட்டு விருப்பத்தை கண்டுபிடிப்பது முக்கியம்.
NRI Investment Options: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான டாப் முதலீட்டு திட்டங்கள் title=

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) பல்வேறு முதலீட்டு வழிகள் உள்ளன. எனினும், இவற்றில் எந்த வழி சிறந்த வழியாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்பது எளிதல்ல. அத்தகைய சூழ்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முழுமையான நிதி பாதுகாப்பு மற்றும் சீரான வருமானத்தை வழங்கும் ஒரு சிறந்த முதலீட்டு விருப்பத்தை கண்டுபிடிப்பது முக்கியம். சில என்ஆர்ஐக்கள் தங்கள் குடும்பத்திற்காக ஒரு கார்பஸை உருவாக்க முதலீடு செய்கிறார்கள். சிலர் தாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தால் தேவையான ஏற்பாடுகளை செய்ய முதலீடு செய்ககிறார்கள். மற்றவர்கள் வேகமாக விரிவடையும் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த வருமானத்தைப் பெற விரும்புகிறார்கள்.

என்ஆர்ஐ முதலீட்டாளருக்கு எது சிறந்த முதலீடாக இருக்கும் என்பது மிகவும் பொதுவான கேள்வியாகும். இதற்கான பதில், அவர்களின் முதலீட்டு இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் தன்மை மற்றும் வருமானம் பற்றிய எதிர்பார்ப்புகளைப் பொறுத்தது. மியூச்சுவல் ஃபண்டுகள் முதல் ரியல் எஸ்டேட் வரை முதலீட்டிற்கான பல வழிகள் உள்ளன. இவற்றில் என்ஆர்ஐகளுக்கான பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

மியூசுவல் ஃபண்டுகள் 

நீண்ட கால முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு எப்போதும் மியூசுவல் ஃபண்டுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகள் கடன் முதல் ஈக்விட்டி வரை பரந்த அளவிலான முதலீட்டு விருப்பங்களை வழங்குகின்றன. மேலும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் நல்ல வருமானத்தை அளிக்கும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, என்ஆர்ஐக்கு என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்கு தேவை. ஏனெனில் இதில் அவர்கள் இந்திய ரூபாயில் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

மேலும் படிக்க | சேமிப்பு கணக்கை NRE கணக்காக மாற்ற முடியுமா? NRI, NRE, NRO-வித்தியாசம் என்ன? 

யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (யுஎல்ஐபி)

ULIP ஆனது முதலீடு மற்றும் காப்பீட்டின் பலன்களை ஐந்தாண்டுகளுக்கான பொதுவான லாக்-இன் காலத்துடன் ஒருங்கிணைக்கிறது. இருப்பினும், ULIP களுக்கு செலுத்தப்படும் பிரீமியங்கள் வருமான வரிச் சட்டம், 196 இன் பிரிவு 80C மற்றும் 10(10D) இன் கீழ் கழிக்கப்படும்.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)

என்.பி.எஸ்., பணி ஓய்வுக்குப் பிறகு இந்தியாவில் குடியேற வேண்டும் என்ற இலக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே இது முதலீடாக பரிந்துரைக்கப்படுகிறது. அரசாங்கப் பத்திரங்களைப் பொறுத்தவரை, அவை இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் குறைந்த ஆபத்து முதலீடுகள். அரசாங்கப் பத்திரங்கள் வர்த்தகம் செய்யக்கூடிய பத்திரங்கள் ஆகும். வெளிப்புற காரணிகளின் அடிப்படையில் சந்தையில் அவற்றின் விலைகள் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டவை.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் ஒரு கவர்ச்சிகரமான மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீடாக உள்ளது. CRE (வணிகச் சொத்து) துறை, REITகள் மற்றும் பகுதி உரிமை போன்ற அணுகக்கூடிய கருவிகளிலிருந்து  மகத்தான நிரப்புதலைப் பெற்றுள்ளது. இவை சில்லறை முதலீட்டாளர்களுக்கு சந்தையை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளன. CRE இன் வாடகை வசூல் குடியிருப்பு சொத்துக்களை விட அதிகமாக உள்ளது.

ஒரு வணிகச் சொத்தின் வாடகை வசூல், குடியிருப்புச் சொத்திலிருந்து கிடைக்கும் விளைச்சலை விட ஆண்டுக்கு சுமார் 8-10 சதவிகிதம் அதிகமாகும். எனவே, பகுதி உரிமையில் ரூ.25 லட்சம் முதலீடு செய்தால், வாடகை வருமானத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் கிடைக்கும். இது உங்கள் நிதியின் நிலையான விரிவாக்கத்திற்கும் மாதாந்திர பணப்புழக்கத்தில் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது.

அரசு பத்திரங்கள்

அரசாங்கப் பத்திரங்கள் அல்லது G-Secs என்பது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு விருப்பங்கள் ஆகும். அவை கருவூல பில்கள் (ட்ரெஷரி பில்கள்) அல்லது பத்திரங்களில் வழங்கப்படுகின்றன. இதன் முதிர்வு சில நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை இருக்கும். இந்த பத்திரங்கள் நிலையான வட்டி விகிதங்கள் அல்லது மிதக்கும் விகிதங்களைக் (ஃப்ளோடிங் ரேட்) கொண்டிருக்கலாம். அவை சந்தை தொடர்பான மாற்றங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | ஐரோப்பிய நாடுகளில் வேலை தேடுவோருக்கு GOOD News! 7 EU நாடுகளின் முக்கிய அறிவிப்புகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News