குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பிராமணர் தொடர்பான நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் ஆர்.திரிவேதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
நன்கு கற்றறிந்தவர்களை பிராமணர் என அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்த வகையில் பி.ஆர். அம்பேத்கரை பிராமணர் என்று அழைப்பதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த கூற்றுப்படி பிரதமர் மோடியையும் பிராமணர் என்று அழைக்கலாம் இவ்வாறு அவர் பேசினார்.
No hesitation in saying that BR Ambedkar is a Brahmin. There is nothing wrong in calling a learned person a Brahmin. In that context, I will say that PM Narendra Modi is also a Brahmin: Gujarat Assembly Speaker R Trivedi at 'Mega Brahmin Business Summit' in Gandhinagar. (29 Apr) pic.twitter.com/6QDp0PqZnH
— ANI (@ANI) April 30, 2018
பா.ஜ.க. தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி வரும் நிலையில், பிராமணர் பற்றிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.