நடிகை நயன்தாரா, ஆந்திராவின் முன்னாள் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கிறார்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார்.
இந்த நிலையில் ரஜினி-யின் கார்த்திக் சுப்புராஜ் படம், கமல்-ளின் ஷங்கர் படம், அஜித்-தின் சிவா படம் மற்றும் மம்முட்டி நடிக்கவுள்ள தெலுங்கு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராகவும் இருந்த மறைந்த என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகா உருவாக்கும் நிலையில். இந்த படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு போட்டியாக மற்றொரு முன்னாள் முதல்வர் கதையும் படமாகிறது என தகவல்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
ஆந்திர முதல்வராக இருந்து ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஒய்.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கையை வாழ்க்கை சரித்திர படமாக்க திட்டமிட்டுள்ளனர். ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மம்மூட்டியும், ஒய்.எஸ்.ஆர்-ன் மனைவி விஜயம்மாவாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் மகிராகவ் என்பவர் இயக்குகிறார்.
ஒய்.எஸ்.ஆர் வாழ்க்கையில் 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை நடந்த முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாவதாகவும், இந்தப் படத்தில் அவர் 3 மாத பாதயாத்திரை ஒன்றில் பங்கேற்ற சம்பவமும் இடம் பெறுகிறதாம்! எனவே, இந்தப் படத்துக்கும் 'யாத்ரா' என டைட்டில் வைக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு தேசம் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸுக்கு இடையே ஆந்திராவில் அரசியல் ரீதியாக கடும்போட்டி நிலவுகின்ற நிலையில், அந்த கட்சி தலைவர்களாக திகழ்ந்த என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி வாழ்க்கை படமாகவுள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.