Zee Tamil TV Serial: அன்று முதல் இன்று வரை இந்தியாவில் வரதட்சணை கொடுமை என்பது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் வருகிறது. வரதட்சணை வாங்குவதும் குற்றம் என சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் இந்த நிலை மாற்றம் இல்லாமல் தொடர்ந்து நடந்து தான் வருகிறது.
இதனால் பல ஏழை பெண்கள் இன்று வரை கஷ்டப்பட்டு வருகின்றனர் என்பதற்கு அடிக்கடி செய்திகளில் வெளியாகும் தகவல்களே சாட்சி. இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக சமூக மாற்றத்திற்காக ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியல் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
அதாவது, பெண்களின் சுயமரியாதை தான் அவர்களின் சீர் என புதிய புரட்சியை கையில் எடுத்துள்ளனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ரகுராம் வீட்டிற்கு வந்த புவனேஷ்வரி வரதட்சிணை குறித்து பேச ரகுராம் தன்னுடைய மகளுக்காக என்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதை சொல்ல வருகிறார்.
இந்த நேரத்தில் வரதட்சிணை வாங்குவது தப்பு என்று சொல்லும் மாயா ரகுராமை தனியாக அழைத்து சென்று உங்களுடைய பொண்ணை கஷ்டப்பட்டு படிக்க வச்சி இருக்கீங்க, அவளுக்கான சுயமரியாதை தான் அவளுடைய சீர் என்று சொல்ல அதை ஏற்கும் ரகுராம் தனா படித்து வாங்கிய சான்றிதழ்களையும் விளையாடி வாங்கிய கோப்பைகளை கொண்டு வந்து இது தான் நான் என்னுடைய பெண்ணுக்காக கொடுக்கிற சீர் என சொல்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாக பலர் வரதட்சிணை பிரச்சனையால் இன்னமும் பல பெண்கள் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள், இந்த நிலை மாற வேண்டும். சந்தியா ராகம் டீம் எடுத்த இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று கூறி வருகின்றனர். வரதட்சிணைக்கு எதிராக சரியான நேரத்தில் குரல் எழுப்பி உள்ளீர்கள் என்று சிலரும் கமெண்ட் செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ