கோலாகலமாக தொடங்கிய ஜீ தமிழ் குடும்ப விருதுகள், சேனல் எடுத்த புதிய முயற்சி!!

Zee Tamil: கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரபலங்கள்... விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் தயார் செய்யப்பட்டு மக்களின் ஓட்டுகள் மூலமாக வெற்றியாளரை தேர்வு செய்ய உள்ளது சேனல் நிர்வாகம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2023, 08:38 PM IST
  • ஜீ தமிழ் சேனலின் 15 வருட வெற்றிப்பயணம்.
  • உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் ஜீ தமிழ்.
  • தீபாவளி விருந்தாக வரும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள்.
கோலாகலமாக தொடங்கிய ஜீ தமிழ் குடும்ப விருதுகள், சேனல் எடுத்த புதிய முயற்சி!!  title=

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக கோலோச்சி வருகிறது ஜீ தமிழ். மற்ற மொழிகளின் மூலம் பிரபலமான சேனலாக விளங்கி ஜீ தமிழ் சின்னத்திரையில் தடம் பதித்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 

இந்த 15 வருட வெற்றியை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் சேனலின் லோகோ உள்ளிட்டவை புதிய பொலிவுடன் புத்துணர்ச்சி பெற்றன. ஜீ தமிழின் இந்த மாற்றம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

zee tamil

இதனை தொடர்ந்து இதுவரை இல்லாத வகையில் உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் விதமாக ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி தீபாவளி விருந்தாக டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 

இதற்கான நாமினேஷன் பட்டியல் தயார் செய்யப்பட்டு மக்களின் ஓட்டுகள் மூலமாக வெற்றியாளரை தேர்வு செய்ய உள்ளது சேனல் நிர்வாகம். இதற்காக ஜீ தமிழ் ரசிகர் ரசிகைகள், பிரபலங்கள், மீடியாக்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் மக்களிடம் இருந்து ஓட்டுக்களை பெறுவதற்கான வேலைகள் தொடங்கி உள்ளன. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 2 பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வாகனத்தில் 3000 கிலோ மீட்டர் மேல் பயணம் செய்து கிட்டத்தட்ட 20 லட்சம் மக்களை நேரில் சந்தித்து ஒட்டு சேகரிக்க உள்ளனர். ஒரு வாகனம் திருச்சியில்  இருந்தும் இன்னொரு வாகனம் தமிழக கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரியில் இருந்தும் தனது பயணத்தை தொடங்க உள்ளது. 

மேலும் படிக்க | புத்தம் புதிய பொலிவுடன் ஜீ தமிழ்.. இரண்டு புதிய சீரியல்களுடன் அதிரடி மாற்றம்!

இந்த ஒட்டு சேகரிப்பு பயணமானது அக்டோபர் 12-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை ஜீ தமிழ் அலுவலகத்தில் தொடங்கியது. அர்ச்சனா ஆங்கரிங் செய்ய ஜீ தமிழ் பிரபலங்கள், முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், ரசிகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கொடி அசைத்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். ஜீ தமிழின் இந்த புதிய முயற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சமந்தா to தனுஷ்-தென்னிந்திய திரையுலகை அதிர வைத்த விவாகரத்து செய்திகள்..!

மேலும் படிக்க | விரைவில் முடிவுக்கு வரும் 2 முக்கிய சீரியல்கள்..! சோகத்தில் ரசிகர்கள்..!

Trending News