Zee Studios தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து, இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறது. அந்தவகையில் அடுத்த படைப்பாக காந்தி டாக்ஸ் படத்தை தயாரிக்கிறது.இந்தப் படம் ஒரு மௌன படமாஉம். காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, கடந்த கால மௌனப் பட பரவசத்தை தற்கால பார்வையாளர்களுக்கு தரும் என கருதப்படுகிறது. இப்படத்தில் பிரபல முன்னணி திரைபிரபலங்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ரி மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குநர் கிஷோர் P பெலேகர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் இருக்கும் ஒரே மொழி என்பது இசை மட்டுமே.அதனால் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படம் குறித்து இயக்குநர் கிஷோர் P பெலேகர் கூறுகையில், “ மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைசொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் நிறைந்ததுகூட” என்றார்.
மேலும், Zee Studiosன் ஷாரிக் படேல் கூறுகையில், “இதன் கதை தனித்துவமானது,அனைவரும் இதனை தங்கள் வாழ்வுடன் தொடர்புப்படுத்திக்கொள்ளலாம். பலமான கமர்ஷியல் அம்சங்களுடன் நல்ல பொழுதுபோக்கு அம்சத்தை இக்கதை கொண்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோருடன் ஒரு மௌனப் படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புது முயற்சி எங்களுக்கு மிகவும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தந்துள்ளது” என்று பேசினார். இந்தப் படமானது உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ஏற்கனவே கமல் நடிப்பில் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு பேசும் படம் என்ற பெயரில் வசனமே இல்லாமல் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கமல் ஹாசனுடன் அமலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் இன்றுவரை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திவருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ