விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு ஏன் வரவில்லை? மன்சூர் அலிகான் கொடுத்த பதில் இதோ!

Vadivelu-Vijayakanth: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு வராதது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 31, 2023, 11:46 AM IST
  • விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார்.
  • இவரது இறப்பிற்கு வடிவேலு வரவில்லை.
  • காரணம் என்ன?
விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு ஏன் வரவில்லை? மன்சூர் அலிகான் கொடுத்த பதில் இதோ!  title=

தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு நடிகர் வடிவேலு வரவேயில்லை. இது குறித்து மன்சூர் அலிகான் பேசியுள்ளார். 

விஜயகாந்த் உயிரிழப்பு:

நடிகர் விஜயகாந்த், நுரையீரல் அழற்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். முன்னர், கட்சிப்பணி-மக்கள் பணி என இருந்த அவர், உடல் நிலை சரியில்லாததால் வீட்டிற்குள்ளேயே முடங்கினார். இதையடுத்து, இவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், இவரது இறப்பிற்கு திரையுலகினர், ரசிகர்கள், தொண்டர்கள், பொது மக்கள் என பலர் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆனால், அவருடனேயே இருந்து பல ஆண்டுகள் நட்பாக பழகிய நகைச்சுவை நடிகர் வடிவேலு வரவே இல்லை. 

விஜயகாந்தின் உடல் டிசம்பர் 29ஆம் தேதியன்று கோயம்பேட்டில் உள்ள அவரது தேமுதிக அலுவலக வளாகத்தில், அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அடைக்கலம் செய்யப்பட்டது. 

மன்சூர் அலிகான் பேட்டி..

விஜகாந்த் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகம் செய்து வைத்த நடிகர்களுள் ஒருவர் மன்சூர் அலிகான். இவர், கேப்டனின் இறப்பின் போது நொறுங்கி போய்விட்டார். விஜயகாந்தின் இறுதி சடங்கு முழுவதும் அவர், கேப்டனின் குடும்பத்தினருடன் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விஜகாந்தின் இறப்பு குறித்து சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்.  ‘சில வருடங்களுக்கு முன்னர் உடல் ரீதியாக மிகுந்த துயரத்தை அனுபவித்த அவர் இறைவனடி சேர்ந்தது நல்ல விஷயம் என்று மக்கள் ஆத்மார்த்தமாக நினைத்திருப்பர்’ என்று கூறினார். மேலும், அவரிடம் வடிவேலு விஜயகாந்தின் இறப்பில் கலந்து கொள்ளாதது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘அதை பற்றி நான் பேச விரும்பவில்லை’ என்று கூறிவிட்டார். 

மேலும் படிக்க | விஜயகாந்த் ‘கேப்டன்’ என அழைக்கப்படுவது ஏன்? அடைமொழிக்கு பின்னால் இருக்கும் பெரிய கதை!

வடிவேலு விஜயகாந்த் பிரச்சனை..

வடிவேலு, விஜயகாந்துடன் சேர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளார். வடிவேலுவின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது வடிவேலுக்கு உதவியது விஜகாந்த்தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களுக்கிடையே ஏற்பட்ட சிறிய மனஸ்தாபம் பின்னாளில் பெரிதாக வளர்ந்தது. இதை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு வடிவேலுவை வைத்து விஜயகாந்திற்கும் அவரது தேமுதிக கட்சிக்கு எதிராகவும் பேச வைத்தனர். வடிவேலுவும் விஜயகாந்தை பல இடங்களில் தரக்குறைவாக பேசினார். இதையடுத்து இவர்களுக்குள் முற்றிலுமாக பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. 

வடிவேலு விஜயகாந்தின் இறப்பிற்கு வந்திருந்தால் அங்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், விஜயகாந்த் இறந்த போது வடிவேலு அவர் குறித்து இழிவாக பேசிய சில வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதனால், நடிகர் வடிவேலுவின் மீது பலருக்கு வெறுப்பு உண்டானது. இப்போதாவது மன்னிப்பு கேட்குமாறு பலர் வடிவேலுவை திட்டி பதிவுகளை வெளியிட்டனர். இருப்பினும், வடிவேலுவின் தரப்பில் இருந்து எந்த இரங்கல் செய்தியோ அல்லது அறிக்கையோ வெளியாகவில்லை. 

நடிகர் விஜயகாந்தின் இழப்பு தமிழக்திற்கே பேரிழப்பாக பார்க்கப்பட்டது. அவர் உயிருடன் இருந்த போது கேலி காட்சி பொருளாக அவரை மாற்றிய மீம்ஸ் கிரியேட்டர்களும் பிறகு வருத்தம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர். 

மேலும் படிக்க | கெத்தான கேப்டன்... சிவாஜி இறுதி ஊர்வலத்தில் சிங்கமாய் சீறிய விஜயகாந்த்! வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News