ஜிகர்தண்டா-2 படத்தின் ஹீரோ யார்? வெளியான தகவல்!

'ஜிகர்தண்டா-2' படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Apr 9, 2022, 05:07 PM IST
  • 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா படம் வெளியானது.
  • பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது.
  • விரைவில் இந்த படத்தின் பார்ட் 2 வெளிவர உள்ளது.
ஜிகர்தண்டா-2 படத்தின் ஹீரோ யார்? வெளியான தகவல்! title=

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் ஆகியோரது நடிப்பில் வெளியான 'ஜிகர்தண்டா' படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்தப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் உடன் ராகவா லாரன்ஸ் இணைவார் என்று கூறப்படுகிறது, மேலும் இதில் சேதுவாக தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவே நடிப்பார் என்றும் பேசப்படுகிறது.  அதுமட்டுமல்லாது பான் இந்திய நடிகர் ஒருவரும் இப்படத்தில் இணைந்து படத்தை சிறந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல துணைபுரிவார் என்றும் கூறப்படுகிறது.  இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

jigarthanda

மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

ஜிகர்தண்டா-2 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும்,  இந்த திரைப்படத்தை 2023ம் ஆண்டில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த 'மகான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.  ஆக்ஷன் கலந்த இந்த அதிரடி திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் பல கிடைத்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மதிப்பை மென்மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்தது.  இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்குனர் கையில் எடுத்துள்ளார்.

மேலும் இதுவரை ராகவாலாரன்ஸின் இரண்டு படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தான் மூன்றாவது முறையாக ராகவா லாரன்ஸை வைத்து 'ஜிகர்தண்டா-2' படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்தைத் தொடங்குவதற்கு இடையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு திரையுலக பிரபலம் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் 'RC15' திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.  இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார்.  மேலும் ராகவா லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்' மற்றும் 'அதிகாரமா' ஆகிய இரு படங்களில் பணியாற்றி வருகிறார்.

மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News