இதுதான் அர்ச்சனாவின் தற்போதைய நிலை; மகள் வெளியிட்ட போஸ்ட்

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 12, 2021, 09:16 AM IST
இதுதான் அர்ச்சனாவின் தற்போதைய நிலை; மகள் வெளியிட்ட போஸ்ட் title=

தமிழில் முன்னணித் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் பிக்பாஸ் நான்காவது சீசனில் அர்ச்சனா கலந்துகொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனா மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனாலேயே இவர் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்கவில்லை. தனது யூடுயூப் சேனலில் மட்டும் வீடியோகளை தனது வந்தார். அதிலும் அவரது பாத்ரூம் டூர் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ச்சனாவிற்கு எதிராக பல சோலோ யூடுயூபர்கள் விமர்சனத்தை முன் வைத்தனர். இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீ தமிழ் சேனல் பக்கம் செல்லாமல் இருக்கும் அர்ச்சனா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

ALSO READ | மூளையில் பிரச்சினை: அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை; ரசிகர்கள் சோகம்

இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே தனக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் காலை வாரத்தில் வீடு திரும்பி விடுவேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி அர்ச்சனாவின் தற்போதைய நிலையில் குறித்து அவரது மக்கள் ஜாரா வினித் அப்டேட் தெரிவித்து உள்ளார். 

நேற்று அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும் தனது அம்மாவின் உடல் நிலை குறித்து பதிவிட்டுள்ள அர்ச்சனாவின் மகள், அர்ச்சனா குறித்து சாதாரண சிகிச்சை பிரிவிற்கு வந்துவிட்டார். தற்போது நலமாக இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யங்கள் என்று தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் ஜாரா வினித் பதிவிட்டுள்ளார்.

ALSO READ | செம கிளாமர் உடையில் பிக்பாஸ் ரைசா, வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News