விருமன் பஞ்சாயத்து ஓவர் - வருத்தம் தெரிவித்தார் பாடலாசிரியர் சினேகன்

பாடலாசிரியர்களுக்கு விருமன் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என கூறியிருந்த சினேகன் தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 8, 2022, 03:57 PM IST
  • விருமன் படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது
  • படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது
  • ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது
விருமன் பஞ்சாயத்து ஓவர் - வருத்தம் தெரிவித்தார் பாடலாசிரியர் சினேகன் title=

கொம்பன் பட வெற்றிக்கு அடுத்ததாக கார்த்தியும், முத்தையாவும் இணைந்திருக்கும் படம் விருமன். 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் இசை மற்று ட்ரெய்லர் மதுரையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு பாடலாசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரபல பாடலாசிரியர் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் விருமன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செனனியில் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட சினேகன், “நான் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு நான் சொன்ன விஷயம் பெரியதாக பேசப்பட்டுவிட்டது. 'மதுரையில் நடந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர்களுக்கு அழைப்பிதழ் இல்லாதது வருத்தமாக இருந்தது. 

ஏனென்றால் 10 படங்களில் நாங்கள் பாடல்கள் எழுதினால், அதில் இரண்டு படங்களுக்கு மட்டுமே எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.அப்படியான ஒரு படமாகத்தான் நான் விருமனை நினைத்தேன். அப்படியிருக்கும்போது, அழைப்பிதழ் வராதது குறித்து பாடலாசியர்களுக்கான மரியாதை குறைந்துகொண்டே வருகிறதா? என்ற ஒரு விஷயத்தை பகிர்ந்தேன். அதனால் நான் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் 2டி நிறுவனம் உள்ளிட்டோருக்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

Surya, Karthi

வருத்தம் என்பது அன்பின் மிகுதியே தவிர, யாரையும் காயப்படுத்தவேண்டும் என சொல்லவில்லை. கார்த்தியின் 'பருத்தி வீரன்' படத்தில் அனைத்து பாடல்களையும் நான் எழுதினேன். சூர்யாவின், 'ஆடாத ஆட்டமெல்லாம்' பாடல் தொடங்கி, 'காட்டுப்பயலே' பாடல்வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மேலும் படிக்க | மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுத்த இயக்குனர் சீனு ராமசாமி!

அப்படிப் பார்க்கும்போது ஒரு சில நிறுவனங்களைத்தான் நம்முடைய சகோதரர்களின் நிறுவனமாக கருதுவோம். அப்படி அவர்கள் கண்டுகொள்ளாதபோது அன்பின் மிகுதியில் வரும் வருத்தம்தானே தவிர வேறில்லை. மற்றபடி இதனை தவறாக சித்தரிக்க வேண்டாம். ஆனால் அன்றைக்கு என்னை மதுரைக்கு அழைக்கவில்லை என்றாலும் நான் டிவியின் முன் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.

Aditi

மதுரையில் இருந்த உணர்வை அது கொடுத்தது. என் நண்பர்கள் சிலர், '2டியை எதிர்த்து பேசிட்ட இனி வாய்ப்பு கிடைக்காது' என்றனர். உண்மையை சொன்னால் வாய்ப்பு கிடைக்காது என்றாலும் பரவாயில்லை என்றேன். 2டி குடும்பத்தில் தொடர்ந்து பயணிப்பேன் என நம்புகிறேன்” என்றார்.

மேலும் படிக்க | மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டார் வீட்டில் புதிய வாரிசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News