மாதவன்-விஜய்சேதுபதியின் 'விக்ரம் வேதா' பஸ்ட் லுக் வெளியீடு

Last Updated : Feb 22, 2017, 10:49 AM IST
மாதவன்-விஜய்சேதுபதியின் 'விக்ரம் வேதா' பஸ்ட் லுக் வெளியீடு title=

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

'ஓரம் போ', 'வா' உள்ளிட்ட படங்களை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. இருவருமே தங்களுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்தார்கள். இப்படத்தை சசிகாந்த் தயாரிக்க முன்வந்தார்.

'விக்ரம் வேதா' எனத் தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

வினோத் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு சாம் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கிறது. 

தற்போது இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

 

 

Trending News