இளைய தளபதி விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்து, ஏற்கனவே அந்த சேனலில் புரோமோ ஒன்றை ரிலீஸ் செய்திருந்தார். இந்நிலையில், தன் வாழ்க்கை வரலாற்றின் முதல் எபிசோடை ’பிளாட்பார்மில் எஸ்ஏசி’ என்ற தலைப்பில் இப்போது ரிலீஸ் செய்துள்ளார்.
மேலும் படிக்க | ஹிட்டான படத்தின் பார்ட்2-வை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி
சிவப்பு கலர் காரில் தி.நகரில் இருக்கும் நாயுடு ஹால் முன்பு வந்திறங்கும் அவர், ஒரு பாய் மற்றும் தலையணையை எடுத்துக் கொண்டு வந்து பிளாட்ஃபார்மில் அமர்கிறார். அதன்பிறகு தன் வாழ்க்கை பயணம் குறித்து பேசும் எஸ்.ஏ.சந்திரசேகர், தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து தான் சென்னை வாழ்க்கையை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். நாயுடு ஹால் முன்பு சுமார் 47 நாட்கள் இருந்ததாகவும், வீதிகளிலேயே படுத்துறங்கியதாகவும் கூறியுள்ளார். மழை வரும்போதெல்லாம் அருகில் நின்று கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்களுக்குள் சென்று அமர்ந்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், பழைய நினைவுகளை எப்போதும் தான் மறப்பதில்லை எனக் கூறியுள்ளார்.
வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தான் படுத்துறங்கிய அந்த இடத்துக்கு வந்து உறங்கிச் செல்வதை இன்றும் வாடிக்கையாக வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரவு 11 மணிக்கு மேல் அங்கு வரும் எஸ்.ஏ.சி அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டிற்கு சென்றுவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார். பிளாட்ஃபார்ம் வாழ்க்கையை இன்னும் மறக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் விஜயின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் யூ டியூப் மூலம் வாழ்க்கை சுயசரிதையை பதிவு செய்ய இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்தடுத்த எபிசோடுகளில் பல சுவாரஸ்ய தகவல்களையும் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரகுமான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR