மாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம் இதோ

Maharaja Movie Box Ofiice Collections: இந்தியளவில் மகாராஜா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காண்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 15, 2024, 12:07 PM IST
  • விஜய் சேதுபதியின் 50வது படம்
  • ரசிகர்கள் பாசிடிவான விமர்சனம் கொடுத்திருக்கின்றனர்
  • மகாராஜா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்
மாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம் இதோ title=

Maharaja Movie Box Ofiice Collections Day 1 : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் முதல் நாளில் எவ்வளவு வசூல் இந்த படம் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

மகாராஜா திரைப்படம்:
ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது, மகாராஜா. இந்த படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் இந்த படத்தில் மமதா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமான அனுராக் காஷ்யப் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டிய விஷயங்களுள் ஒன்று, இந்த படத்தின் காஸ்டிங்தான். இந்த படத்தை ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருத்துள்ளது. மேலும் இது நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாகும்.

மகாராஜா படத்தின் விமர்சனம்:
இதனிடையே நேற்று வெளியான மகாராஜா திரைப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. திரை பிரபலங்கள் பலர் படத்தை பாராட்டி வருகின்றனர். அதனுடன் படத்தை பார்த்த பொதுமக்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். குறிப்பா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி அழ வைத்துள்ளார் என மக்கள் கனத்த இதயங்களுடன் தியேட்டரில் இருந்து வெளியேறும் போது கூறினர்.

 

மேலும் படிக்க | Premgi : பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் உள்ள வயது வித்தியாசம்! அம்மாடி..இவ்வளவா?

தொடர்ந்து வித்தியாசமான படங்களையும் தேடித் தேடி நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி தனது 50வது படமான மகாராஜா படத்தின் மூலம் மாஸ் ஹிட் கொடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அதன்படி இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு கதி கலங்க வைக்கிறது என்றே கூறலாம்.

மகாராஜா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்: 
இந்நிலையில் பாசிட்டிவ் விமரசங்களை தொடர்ந்து பெற்று வரும் மகாராஜா திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியளவில் இந்த படம் முதல் நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம் உலகம் முழுவதிலும் மொத்தமாக மகாராஜா திரைப்படம் 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே வரும் நாட்களில் நிச்சயம் இந்த படம் =மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் படிக்க | ரோஜா கூட்டம் போல் அழகில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்.. இதோ போட்டோஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News