ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனி

ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2024, 11:26 AM IST
  • ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் விஜய் ஆண்டனி.
  • ரோமியோ திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக காதல் களத்தில் குதித்து இருந்தார்.
  • இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கும் நல்ல என்டர்டைன்மென்ட் படமாக அமைந்தது.
ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனி title=

Vijay Antony Angry Statement : ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பான முழுமையான தகவலை இந்த பதிவில் காண்போம்.

ரோமியோ திரைப்படம்:
விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் ஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ரோமியோ. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த ரோமியோ திரைப்படம் இந்த சம்மர் விடுமுறையை டார்கெட் செய்து வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியிருந்தார். 

முதல்முறையாக காதல் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி:
தற்போதுவரை அதிகமாக கிரைம் கில்லர் மற்றும் சென்டிமென்ட் படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் விஜய் ஆண்டனி, ரோமியோ திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக காதல் களத்தில் குதித்து இருந்தார். முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக வெளியாகி இருந்தது இந்த  ரோமியோ திரைப்படம். மேலும் நாயகி மிருணாளினி நாம் இதுவரை பார்த்த படங்களில் இல்லாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் நடிகை மிருணாளினி மற்றும் விஜய் ஆண்டனிக்குமான கெமிஸ்ட்ரி சுவாரசியமாக அமைந்து படத்துக்கு பிளசாக அமைந்திருந்தது. இதன் மூலம் இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கும் நல்ல என்டர்டைன்மென்ட் படமாக அமைந்தது.

மேலும் படிக்க | பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2: வெளியீடு முக்கிய அப்டேட்

ப்ளு சட்ட மாறனை விளாசிய நடிகர் விஜய் ஆண்டனி:
இந்நிலையில் ஆன்லைனில் பிரபலமாக இருக்கும் ப்ளு சட்ட மாறன் வழக்கம்போல இந்த படத்தையும் க் கழுவி ஊற்றி இருந்தார். இதனால் கடுப்பான நடிகர் விஜய் ஆண்டனி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் ப்ளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவி ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிவிடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ரஜினிகாந்தின் நிகர மதிப்பு! சென்னையில் மட்டுமே இத்தனை சொத்துக்களா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News