விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கான காரணம்..மருத்துவர் சொன்ன தகவல்..!

Vijay Antony Daughter Suicide Reason: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார், இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 24, 2023, 10:23 AM IST
  • விஜய் ஆண்டனியின் மகள், கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
  • இதற்கான காரணம் குறித்து மனநல மருத்துவர்கள் பலர் சில தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
  • அந்த வகையில் ஒரு மருத்துவர் ஒரு நேர்காணலில் இது குறித்து பேசியுள்ளார்.
விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கான காரணம்..மருத்துவர் சொன்ன தகவல்..!  title=

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா. 16 வயதாகும் இவர், சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். இவர், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

16 வயது சிறுமி தற்கொலை..! 

விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா, செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் அவரது தந்தையின் அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரை பிரபலங்களான சின்மயி, சிபிராஜ், சத்யாராஜ், சிம்பு, ஹரிஷ் கல்யாண், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். 

காரணம் என்ன..? 

மீரா, தான் படிக்கும் பள்ளியின் தலைவராக இருந்ததாக கூறப்படுகிறது. அவர் மிகவும் தைரியமானவர் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மீராவின் இறப்பை அடுத்து, மனநல ஆலோசகர்களும் மருத்துவர்களும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சில பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மக்களிடையே பிரபலமான மனநல மருத்துவர் ஒருவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவர் விஜய் ஆண்டனியின் மகளின் மரணத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். 

மேலும் படிக்க | விவேக் முதல் விஜய் ஆண்டனி வரை..பேரிழப்பை சந்தித்த சினிமா பிரபலங்கள்..!

“தனியாக விடக்கூடாது..”

அந்த மருத்துவர் அளித்துள்ள பேட்டியில், டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகள் பலருக்கு வீடுகளில் தனியாக அறை கொடுக்கப்படுவதாகவும் இதனால் அவர்களுக்கு குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவதற்காக வாய்ப்பு கிடைப்பதே இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதனால், அவர்களுக்கு என்ன நடந்தாலும் பெற்றோரிடம் தெரிவிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் இது, அவர்களை மன அழுத்தத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை தனி அறையில் விடக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார். விஜய் ஆண்டனியின் மகள் விஷயத்திலும் இதுதான் நடந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 

விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு..!

விஜய் ஆண்டனி, தனது மகளின் இறப்பை அடுத்து சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், தன் மகள் இந்த உலகை விட சிறந்த சாதி, மதன், வலி, வறுமை அற்ற ஒரு இடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், அவர் அன்பாவள் மற்றும் தைரியமானவள் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவளுடன் தானும் இறந்து விட்டதாகவும் அவள் பெயரில் தான் செய்ய இருக்கும் நல்ல காரியங்களை அவளே தொடங்கி வைப்பாள் என்றும் கூறியிருந்தார். இந்த பதிவு, ரசிகர்களை நெஞ்சை கணக்க செய்யும் வகையில் இருந்தது. 

விஜய் ஆண்டனி வாழ்வில் இத்தனை சோகமா..

விஜய் ஆண்டனியின் பாடல்கள் என்றால் இளம் வயதினருக்கு மிகவும் பிடிக்கும். திரையுலகை தாண்டி, அடிப்படையில் நல்ல மனிதராக இருக்கும் பிரபலங்களுள் இவரும் ஒருவர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். தனது பட விழா ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு பேசியுள்ள விஜய் ஆண்டனி, தனது தந்தை தனக்கு 7 வயதாக இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். அதனால் யாரும் தயவு செய்து தற்கொலை மட்டும் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். தற்போது அவர் வாழ்வில் மீண்டும் ஒரு பெரும் துயரம் தாக்கியிருப்பது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது. 

மேலும் படிக்க | நடிகர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News