அமைச்சரின் dinner அழைப்பை மறுத்ததால் வித்யா பாலனின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதா?

வித்யா பாலன் தற்போது தனது வரவிருக்கும் ஷேர்னி படத்திற்காக மத்திய பிரதேசத்தில் படப்பிடிப்பில் உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 30, 2020, 05:07 PM IST
  • மத்திய பிரதேசத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் படப்பிடிப்பில் உள்ளார்.
  • வனத்துறை அமைச்சரின் விருந்துக்கான வரவேற்பை அவர் நிராகரித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இதை அமைச்சர் முற்றிலுமாக மறுத்தார்.
அமைச்சரின் dinner அழைப்பை மறுத்ததால் வித்யா பாலனின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதா? title=

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மத்திய பிரதேச மாநில அமைச்சரின் இரவு உணவுக்கான அழைப்பு நிராகரிக்கப்பட்டதால், படத்தின் படப்பிடிப்பு அங்கு நிறுத்தப்பட்டது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வித்யா பாலன் (Vidya Balan) தற்போது தனது வரவிருக்கும் ‘ஷேர்னி’ படத்திற்காக மத்திய பிரதேசத்தில் படப்பிடிப்பில் உள்ளார். மத்திய பிரதேச வனப்பகுதியில் சில காட்சிகளின் படப்பிடிப்புக்காக அவர் கடந்த சில வாரங்களாக அந்த மாநிலத்தில் தங்கி படப்பிடிப்பில் ஈடுப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச (Madhya Pradesh) வனத்துறை அமைச்சர் விஜய் ஷா இரவு உணவிற்கு வித்யா பாலனை அழைத்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இது நடந்து ஒரு நாள் கழித்து, திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவின் வாகனங்கள் படப்பிடிப்புக்காக காட்டுக்குள் நுழைவது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: Adipurush படத்தில் லக்ஷ்மனாக நடிப்பவர் யார் தெரியுமா?

இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகக் கூறி, பலகாட்டின் மாவட்ட வன அலுவலர் (DFO) அணியின் வாகனங்கள் காட்டுக்குள் நுழைவதைத் தடுத்தார்.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஷா, தான்தான் இரவு உணவிற்கான கோரிக்கையை மறுத்ததாகக் கூறினார்.

“படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று சிலர் என்னை அழைத்ததால் நான் பாலாகாட்டிற்கு சென்றேன். அவர்கள் என்னை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு அழைத்தனர். ஆனால், என்னால் இப்போது உணவில் கலந்துகொள்ள முடியாது என்றும் மகாராஷ்டிராவிற்கு (Maharashtra) செல்லும்போது அவர்களை சந்திப்பதாகவும் நான் அவர்களிடம் கூறினேன். ஆகையால், மதிய உணவு/ இரவு உணவுதான் ரத்து செய்யப்பட்டது, படப்பிடிப்பு இல்லை” என்று அமைச்சர் ANI-யிடம் தெரிவித்தார். 

ALSO READ: ஹீரோவாக உருவெடுக்கும் பிக் பாஸ் 3 இன் பிரபல இறுதியாளர்...!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News