விரைவில் முடிகிறது விடுதலை - உற்சாகத்தில் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் விடுதலை படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைய இருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 10, 2022, 04:50 PM IST
  • விரைவில் முடிகிறது விடுதலை ஷூட்டிங்
  • 12 நாள்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டம்
  • ஜெயமோகனின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிறது விடுதலை
விரைவில் முடிகிறது விடுதலை - உற்சாகத்தில் சூரி title=

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு அனைத்து நடிகர்களுக்குமே விருப்பம் இருக்கிறது. அவரது இயக்கத்தில் நடித்தால் சிறந்த கதையில் நடித்த பெருமை, சிறந்த இயக்கத்தி நடித்த பெருமை என பல பெருமைகள் வந்துசேரும் என்பதால் வெற்றிமாறனுக்கென்று கோலிவுட்டில் பெரும் டிமாண்ட் இருக்கிறது.

அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதியும், சூரியும் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை என்ற படத்தில் நடித்துவருகின்றனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

மேலும் படிக்க | தோனியுடன் இணையும் நயன்தாரா?

இதில் விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சூரி காவல் துறை அலுவலராகவும் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்தது.

இந்நிலையி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுவருவதாகவும், 12 நாள்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Vetri Maaran

வெற்றிமாறனின் படம் விரைவில் முடிவடைய இருப்பதால் இப்படம் வெளியாகி தன் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற உற்சாகத்திலும், நம்பிக்கையிலும் சூரி இருக்கிறார். 

மேலும் படிக்க | ரஜினியின் இடத்தில் விஜய்- பின்னணியில் கமல்ஹாசன்?! கசிந்த புதிய தகவல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News