அசத்தலான பர்ஸ்ட் லுக்; வீரப்பன் பெயரில் யோகி பாபு

காமெடி திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2021, 10:30 AM IST
அசத்தலான பர்ஸ்ட் லுக்; வீரப்பன் பெயரில் யோகி பாபு title=

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் உச்சபட்ச காமெடி நடிகராகவும் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்து வந்த யோகிபாபு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'கூர்கா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி இருந்தார். காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
அதனையடுத்து நடிகர் யோகிபாபு (Yogi Babu) இயக்குனர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் மண்டேலா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் ஷீலா குமார் கதாநாயகியாக நடித்திருந்தார். அண்மையில் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான இப்படம் பொருளாதார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

ALSO READ | நடராஜனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யோகி பாபு; புகைப்படங்கள் வைரல்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோகி பாபு தற்போது மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

அறிமுக இயக்குனர் யாசின் இயக்கும் புதிய படத்தின் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிரபாதீஸ் ஷாம்ஸ் மற்றும் ராட்சஷி பட இயக்குனர் கவுதம் ராஜ் இணைந்து கதை எழுதியுள்ளனர். ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், பூஜா, தேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சாத்தியமங்கள காட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு 'வீரப்பன் கஜானா' என பெயரிடப்பட்டுள்ளது. காமெடி திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ALSO READ | #Thalapathy65: விஜய்யின் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, குதூகலத்தில் ரசிகர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News