'மெட்ரோ' படத்தின் காப்பியா 'வலிமை'? மெட்ரோ இயக்குனரின் பதில்!

'மெட்ரோ' படத்தையும், 'வலிமை' படத்தையும் ஒன்றாக ஒப்பிடுவது பற்றி 'மெட்ரோ' படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்னன் கூறியுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2022, 02:58 PM IST
  • வலிமை படம் 3வது நாளில் 100 கோடி வசூல் செய்துள்ளது.
  • வலிமை படம் மெட்ரோ படம் போல் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இது குறித்து மெட்ரோ இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
'மெட்ரோ' படத்தின் காப்பியா 'வலிமை'? மெட்ரோ இயக்குனரின் பதில்! title=

ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வலிமை.  பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்த இந்த படம் வெளியான மூன்றாவது நாளே 100 கோடி ருபாய் வசூலை எட்டி சாதனை படைத்தது இருக்கிறது.  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அஜித் ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி பலரையும் திருப்தி அடைய செய்து இருக்கிறது.  ஆனால் நெட்டிசன்கள் சிலரோ இப்படம் மெட்ரோ படத்தை போன்று உள்ளது என்று கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்

கடந்த 2016ம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம் மெட்ரோ.  இப்படத்தில் சிரீஷ், ரம்யா, பாபி சிம்ஹா, சென்ட்ராயன், சத்யா, நிஷாந்த், ராஜ்குமார் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.  சென்னையில் செயின் திருடர்கள் செய்யும் ஆட்டூழியங்களை காண்பிக்கும் விதமாக இப்படம் அமைந்து இருந்தது.  இந்த படத்தை போலவே அஜித்தின் வலிமை படம் அமைந்து இருப்பதாக படம் வெளியானதிலிருந்தே இணையத்தில் பலவாறு செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றது.  

metro

இந்நிலையில் இவ்விரு படங்களையும் ஒப்பிட்டு செய்திகள் வெளியாவது குறித்து மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில், 'இந்த இரண்டு படங்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு கூறுவது துரதிர்ஷடவசமானது என்றே கூறலாம்.  இந்த படத்தின் எப்டிஎப்எஸ் ஷோவை பார்த்ததிலிருந்து பலரும் என்னை தொடர்புகொண்டு இந்த இரண்டு படங்களின் ஒப்பீடு குறித்து இன்றுவரை கூறி வருகின்றனர்.  என்னை பொறுத்தவரை இதை நான் தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வாக தான் பார்க்கிறேன்.  இந்த படம் மிக அருமையாக ஓடிகொண்டிருக்கிறது, தமிழ் சினிமாவை மீண்டும் உயிர்பெற செய்யும் ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கிறது.  மேலும் நான் ஒரு அஜித் ரசிகனாக அவரது அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

anand

அஜித் ரசிகர்கள் பலரும் இப்படத்தை புகழ்ந்து வந்தாலும், ஒரு சிலர் இப்படம் குறித்து சில குறைகளை கூறி வருகின்றனர்.  இருப்பினும் இந்த படம் தமிழ் மொழி மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இப்படம் வெளியானதில் இருந்து இன்றுவரை அனைத்து இடங்களில் உள்ள திரையரங்குகளிலும் ஒவ்வொரு ஷோவும் ஹவுஸ்ஃபுல்லாக தான் இருந்து வருகிறது.

மேலும் படிக்க | 'வலிமை' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News