பேய் மாமா-வாக ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு!

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ‘பேய் மாமா’ என தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Last Updated : Mar 5, 2019, 03:10 PM IST
பேய் மாமா-வாக ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு! title=

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ‘பேய் மாமா’ என தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஹாரர் காமெடி ஜானரில் உருவாக இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் வெளியான போஸ்டர் மூலம் தெரிய வருகிறது. இதுபற்றி படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் பொய்யான ஒன்று என்று செய்தி வந்தது. அந்தவகையில் விரைவில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம்.

முன்னதாக சக்தி சிதம்பரம் இயக்கிய கோவை பிரதர்ஸ், இங்கிலீஷ்காரன் படங்களில் வடிவேலு நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Trending News