சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய இந்தப் படத்தை எஸ்.கே புரொடக்ஷனுடன் சேர்ந்து லைகா தயாரித்தது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகம் முழுவதம் படத்தை வெளியிட்டது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் பெரிய வசூலை குவித்ததைத் தொடர்ந்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடத்தப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் உதயநிதிஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய உதயநிதிஸ்டாலின், ‘டான்’ படத்தின் பல சீக்ரெட்ஸ்களை அவிழ்த்துவிட்டார். படத்தை முதலில் பார்க்கும்போது காமெடிக்கு சிரிப்பு வருகிறதா என தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், படத்தின் கடைசியில் வரும் கிளைமேக்ஸ் சீன் மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறினார்.
மேலும் படிக்க | கமல்ஹாசனின் கரியர் பெஸ்ட்டா விக்ரம்? - உண்மை நிலவரம் என்ன?
இதன்பிறகு முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின். டான் கதையை தனக்கு ஏற்கனவே இயக்குநர் சிபிசக்கரவர்த்தி கூறியதாகவும், அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார். பள்ளி சிறுவன் மற்றும் எமோஷன் சீன்கள் தனக்கு ஒத்துவராது என்பதால் அந்த கதையில் நடிக்க விரும்பவில்லை எனக் கூறிய உதயநிதி, சிவகார்த்திகேயன் நடித்ததால் மட்டுமே படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதாக கூறினார். அவருக்குப் பிறகு பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் கதையை நிராகரித்தவர்கள் பெயரை எல்லாம் ஏற்கனவே இயக்குநர் தெரிவித்துவிட்டதாகவும், ஆனால் உங்கள் பெயரை மட்டும் இப்போது வரை கூறாமல் மறைத்துவிட்டார் என நகைச்சுவையாக தெரிவித்தார்.
படம் 125 கோடி ரூபாய் வசூலித்திருப்பது மகிழ்ச்சி என்றாலும், அந்த தொகை எனக்கு வரவில்லை எனக்கூறினார். டான் வெற்றிக்கு ட்ரீட் கேட்பவர்கள் யாராக இருந்தாலும் தயாரிப்பாளர் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தை அணுகுமாறும் தெரிவித்துவிட்டார். கடினமாக உழைத்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் டான் வசூல் என்றும் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியாக கூறினார்.
மேலும் படிக்க | அவதூறு வழக்கில் வெற்றி: இந்திய உணவகத்தில் பிரம்மாண்ட விருந்து வைத்த ஜானி டெப்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR