வெளியானது 'லியோ' படத்தின் மாஸ் ட்ரெய்லர்.. விஜய் ரசிகர்களுக்கு இதோ ட்ரீட்

Leo Trailer Released: லியோ படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியானதில் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 5, 2023, 07:07 PM IST
  • அக்டோபர் 19 ஆம் தேதி லியோ படம் வெளியாக உள்ளது.
  • வெளியானது 'லியோ' படத்தின் மாஸ் ட்ரெய்லர்.
வெளியானது 'லியோ' படத்தின் மாஸ் ட்ரெய்லர்.. விஜய் ரசிகர்களுக்கு இதோ ட்ரீட் title=

லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு: சற்று நேரத்தில் லியோ படத்தின் ட்ரெய்லர். கொட்டும் மழையிலும் குத்தாட்டம் போடும் விஜய் ரசிகர்கள்.

லியோ திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள படம் லியோ. லியோ படம் வெளியாவதற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்து வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இப்படம் வெளிநாடுகளில் அமோக வியாபாரம் செய்ததால், அட்வான்ஸ் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஏற்கனவே UK பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அதிக புக்கிங் ஆனா தமிழ் படமாக மாறி வருகிறது.

படக்குழு:
விஜய்யுடன் கடைசியாக ‘குருவி’ படத்தில் இணைந்து நடித்திருந்த த்ரிஷா, தற்போது 15 வருடங்கள் கழித்து அவருடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். படத்தின் இன்னொரு நாயகியாக வருகிறார், பிரியா அனந்த். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், தமிழ் இய்ககுநரும் நடிகருமான மிஷ்கின், காமெடி நடிகர் வையாபுரி, வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவரது பெயர் இதில் ஆண்டனி தாஸ். இவர்களை தவிர, படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் யார் யார் என்பதை வெளியில் கூறாமல் வைத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்த லிஸ்டில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் தாஸ், பகத் பாசில், நரேன் என பல நட்சத்திரங்கள் உள்ளனர். யார் யார் நடித்திருக்கிறார்கள் என்பது படம் வெளிவந்த உடன்தான் தெரியும். அதுமட்டுமின்றி லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க: மீனாட்சி வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த ரங்கநாயகி

ப்ரீ புக்கிங்கில் சாதனை:
லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பட ரிலீஸின் 40 நாட்களுக்கு முன்பே வெளிநாடுகளில் தொடங்கி விட்டது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கில் மட்டும் இப்படம் 12 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அமெரிக்காவில் 4 கோடியும் யுகேவில் 4 கோடியும், கேரளாவில் 2 கோடியும் பிற இடங்களைல் 2 கோடியும் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளதாம் லியோ. 

லியோ ட்ரெய்லர் வெளியீடு:
இந்நிலையில் சற்று முன் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வழக்கமாக விஜய் பட ட்ரெய்லர் வெளியானால், ரசிகர்களை மகிழ்விப்பதற்காக திரையரங்குகள் அதை ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்வது வழக்கம். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் உள்ள கார் பார்க்கிங்கில் பிரம்மாண்ட ஸ்கிரீன் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் திரையிடப்பட்டுள்ளது. அங்கு அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் கொண்டாடி வருகின்றனர்.

எந்த படத்திற்கும் கிடைக்காத தனி கவனிப்பு:
லியாே படத்தை உலகம் முழுதிலும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இதுவரை எந்த தமிழ் படங்களுக்கும் கிடைக்காத தனி கவனிப்பு ஒன்று லியோ படத்திற்கு கிடைத்துள்ளது. 

வங்காள தேசத்தில் இதுவரை எந்த தமிழ் படமும் வெளியானதில்லை. இந்த நிலையல், விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் முதல் முறையாக அங்கு வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | லியோ சோலோ ரிலீஸ் இல்லை! இன்னொரு படமும் வெளியாகிறது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News