விஜய் 62: இன்று பூஜையுடன் படபிடிப்பை தொடங்கியது!!

இன்று முதல் விஜயின் 62-வது படத்தின் பூஜை நடைபெற்றது. பின்னர் விஜய் கிளப் செய்து படபிடிப்பை தொடங்கிவைத்தார். 

Last Updated : Jan 19, 2018, 03:00 PM IST
விஜய் 62: இன்று பூஜையுடன் படபிடிப்பை தொடங்கியது!! title=

மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான் அமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார். பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இன்று பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

விஜய் 62 படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என ஏ.அர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படமும் தீபாவளிக்கு வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Trending News