இன்று வெளியாகிறது விஸ்வரூபம்-2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Last Updated : May 2, 2017, 03:27 PM IST
இன்று வெளியாகிறது விஸ்வரூபம்-2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்! title=

2013-ம் ஆண்டு, கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த 'விஸ்வரூபம்' திரைப்படம், பல தடைகளுக்குப் பிறகு  வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, 2-ம் பாகத்துக்கான 40 சதவிகிதத்தை கமல்ஹாசன் எடுத்துவிட்டார்.

2-ம் பாகம் எடுப்பதில் இவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கும் இடையில், உரிமை தொடர்பாக சில பிரச்னைகள் இருந்ததால், வெளியீடு தள்ளிப்போனது. 

இந்நிலையில், கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் 'தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 'விஸ்வரூபம்-2'  படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும்' என்று தெரிவித்துள்ளார்.

 

 

Trending News